இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்பகுதியில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






இந்த நிலநடுக்கத்தின் மையம் aceh மாகாணத்தில் உள்ள சிங்கில் நகருக்கு தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 48 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில் (2330 GMT) இது நிகழ்ந்தது மற்றும் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை, சுனாமி எச்சரிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






 இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் அதிகமாக இருந்தது என்றும், அதே நேரத்தில் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் வடக்கு-வடகிழக்கில் "மேடானில் உணரப்பட்டது" என்றும் தெரிவித்துள்ளது.  இந்தோனேசியா பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" மீது அதன் நிலை காரணமாக அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலை  வெடிப்பிகள் ஏற்படுகிறது.  அந்த இடத்தில் டெக்டோனிக் தட்டுகள் மோதும் கரணத்தால் இவை நிகழ்கிறது.  


நவம்பர் 21 அன்று, ஜாவாவின் பிரதான தீவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மேற்கு ஜாவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் 602 பேர்கட்டிடங்கள் இடிந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது. 


சுமத்ரா தீவின் பயங்கரமான நிலநடுக்கங்களில் ஒன்று டிசம்பர் 26, 2004 அன்று ஏற்பட்டது, இது இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது, இது இலங்கை, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுமார் 2,30,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.  அந்த சக்திவாய்ந்த 9.1-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமத்ராவின் banda aceh கடற்கரையைத் தாக்கிய 30-மீட்டர் (100-அடி) அலைகளைத் தூண்டியதால் சுனாமி ஏற்பட்ட்து என்பது குறிப்பிடத்தக்கது.