கடந்த வாரம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் கிராமமே பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வானது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு வங்க கடலில், ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. இதைச் சுற்றி கடல் பகுதி சூழ்ந்துள்ளதால் தீவாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் , புயல்கள், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் என்கா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல்முறை அல்ல. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். இதனால் சுமார் 3 கிராமங்கள் மண்சரிவில் புதைந்துள்ளதாகவும் 6 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

நேற்றைய நிலவரப்படி சுமார்  697 பேர் இறந்திருப்பதாக ஐ. நா தெரிவித்துள்ளது. இச்செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் வரலாற்றிலே நிகழ்ந்தது கிடையாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இன்று காலை ஐ.நா வெளியிட்ட தகவின் அடிப்படையில் சுமார் 2000 பேர் புதைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நிலச்சரிவு இன்னும் நீடிப்பதாகவும், இதனால் பாதிப்புகள் குறித்தும், நிலச்சரிவில் சிக்கியவர்கள் குறித்தும்  தெளிவான தகவல்களை கிடைப்பதிலும் மீட்பு பணியிலும் சில இடங்களில் தொடர் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு தளத்திற்கு மருத்துவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுக்கள் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.