ஐந்து வயது சூப்பர் ஹீரோ ரசிகரான ஜோர்டன் மரோட்டா, பயோனிக் கையைப் பெற்ற உலகின் மிக இளைய சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


இடது கை இல்லாமல் பிறந்த ஜோர்டான்:


அமெரிக்காவை அடுத்த லாங் ஐலேண்டை சேர்ந்த ஜோர்டான் மரோட்டா என்ற 5 வயது சிறுவன், உயர்தர பயோனிக் கையை பெற்று புது வாழ்வை தொடங்கியுள்ளார். இடது கை இல்லாமல் பிறந்த ஜோர்டான், தனது பயோனிக் கையை அயர்ன் மேன் கை வடிவத்தில் இணைத்துள்ளார். 






இது ஒரு அரிதான நிகழ்வு என்றே கூறப்படுகிறது. ஏனெனில் இதுபோன்ற செயற்கை கைகள் குறைந்தது 10 வயது நிரம்பிய குழந்தைகளுக்கே பொறுத்தப்படும். இருப்பினும், ஜோர்டனின் உடல் மற்றும் மன வலிமையை பொறுத்து அவருக்கு கைகள் பொறுத்த சரியானவர் என்று ஓபன் பயோனிக்ஸில் சான்றளிக்கப்பட்ட செயற்கை மற்றும் ஆர்த்தோட்டிஸ்ட் டேனியல் கிரீன் தெரிவித்துள்ளார். 


5 வயதின் சிறுவனின் உடல்வாகுக்கு ஏற்ப செயற்கை கை எடை குறைந்த அளவில் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவரது இடது கையிலிருந்து சிக்கலின்றி இணைக்கவும் பிரிக்கவும் முடியும். மேலும், இது தசை சுருக்கங்களை கண்டறிய எலக்ட்ரோடுகள் மற்றும் சென்சார்கள் கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கை விரல் மற்றும் கையின் இயல்பான இயக்கத்தை செய்ய முடியும். இதை ஒரு முறை ரீசார்ஜ் செய்தா 14 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இது முதல்முறை அல்ல: 


இந்த பயோனிக் செயற்கை கையை பெற்ற முதல் குழந்தை ஜோர்டான் மட்டும் அல்ல. கடந்த 2023ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி ஜோன்ஸ் என்ற 10 வயது சிறுவனுக்கும் பயோனிக் கைகள் பொறுத்தப்பட்டது. வலது கை மற்றும் முழங்கை இல்லாமல் பிறந்த இந்த சிறுவனுக்கு, அயர்ன் மேன் வடிவிலான கைகள் பொறுத்தப்பட்டது மருத்துவர்கள் வெற்றி கண்டனர். இந்த பயோனிக் கைகளில் “ஃப்ரீஸ் மோட்” எனப்படும் ஒரு தனித்துவமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. இது ஹாரிக்கு பொருட்களை பிடிக்க உதவுகிறது.