பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் கிராமமே பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வானது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பப்புவா நியூ கினியா எங்கு உள்ளது? என்ன நடந்தது? மீட்பு பணி எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
பப்புவா நியூ கினியா:
தென்மேற்கு வங்க கடலில், ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. இதைச் சுற்றி கடல் பகுதி சூழ்ந்துள்ளதால் தீவாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் , புயல்கள், எரிமலைகள் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். இந்த நாட்டின் வடக்கு பகுதியில் எங்கோ பகுதி அமைந்துள்ளது. அங்கு, கடந்த வெள்ளிக்கிழமை ( மே 26 ) அன்று அதிகாலை, மலைப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இங்கு நிலச்சரிவு ஏற்பட்டது முதல் முறையில்லை. ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.
நிலச்சரிவால் 697 பேர் இறந்த சோகம்:
அதிகாலை சுமார் 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள அனைவரும் அமைதியாக உறங்கி கொண்டிருந்த நேரம். அப்போது எதிர்பாராத இந்த நிலச்சரிவால் குறைந்த பட்சம் 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் 3 கிராமங்கள் மண்சரிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் சிக்கியுள்ளது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.
ஆனால், தற்போது 697 பேர் இறந்திருப்பதாக ஐ. நா தெரிவித்துள்ளது. இச்செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் வரலாற்றிலே நிகழ்ந்தது கிடையாது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீட்பு பணியில் சிக்கல்:
இச்சம்பவம் குறித்து பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் தெரிவிக்கையில் , மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நிலச்சரிவில் சாலைகள் மூடப்பட்டதாகவும், இதனால் மீட்பு பணியானது கடினமானதாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், பாதிப்புக்குள்ளான பகுதியில் வாகனம் செல்லாத முடியாத நிலை இருப்பதாகவும், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் நிலச்சரிவு பகுதிகளில் நீரானது சென்று கொண்டிருப்பதாலும் மீட்பு பணியில் சிக்கல் இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
நிலச்சரிவு இன்னும் நீடிப்பதாகவும், இதனால் பாதிப்புகள் குறித்தும், நிலச்சரிவில் சிக்கியவர்கள் குறித்தும் தெளிவான தகவல்களை கிடைப்பதிலும் மீட்பு பணியிலும் சில இடங்களில் தொடர் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. நிலச்சரிவு தளத்திற்கு மருத்துவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழுக்கள் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
அத்திப்பட்டி என்ற சினிமா கதையில் வருவது போல, ஒரு இரவில் ஒட்டுமொத்த கிராமமே காணாமல் போன நிகழ்வானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.