இங்கிலாந்து அரசு பாகிஸ்தானை "அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்" பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதிக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் அதிகார வரம்புகளை உள்ளடக்கியது என்று கருதப்படுகிறது.
ஈரான், மியான்மர் மற்றும் சிரியா போன்ற 26 நாடுகளை உள்ளடக்கிய பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு ஒரு பட்டியலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவை அதிக ஆபத்து பட்டியலில் இருந்து நீக்கியது. கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகள் அமைப்பு எடுத்த முயற்சியால், 'நிதி நடவடிக்கை செயற்குழு' 1989இல் நிறுவப்பட்டது.
இது சர்வதேச அரசாங்கங்களுக்கு இடையேயான அமைப்பாகும். நிதி நடவடிக்கை செயற்குழு பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யப்படுவதை கண்காணிக்கிறது.
நிதி நடவடிக்கை செயற்குழு பரிந்துரையின்கீழ், இங்கிலாந்து அரசு, 2021ம் ஆண்டு ஏப்ரலில் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரவேற்கப்படுவதாக நிதி நடவடிக்கை செயற்குழு கூறியுள்ளது. பாகிஸ்தான் பணமோசடி மீதான ஆசிய-பசிபிக் குழுவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று இங்கிலாந்து கருவூலம் வெளியிட்டுள்ள ஆலோசனை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ இங்கிலாந்து அரசு சட்டம் வெளியானது. இந்த சட்டதிருத்தம் "அதிக ஆபத்துள்ள மூன்றாம் நாடுகள்" பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குகிறது.
இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் சர்தாரி பூட்டோ தனது டுவிட்டரில் இந்த செய்தியை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல் குண்டுவெடிப்புக்கு காரணம் சிரிய பெண்மணியா? வெளியான பகீர் தகவல்..!
2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை இங்கிலாந்து சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்க ஆதரவாக இங்கிலாந்து பிரதமர்
உக்ரைனை விட்டு ரஷ்யா வெளியேற வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.
ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும்.
ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மன்றத்தின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த ஜி 20 மாநாட்டில் பங்கேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசினார்.
அவர் பேசியதாவது:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகத் தலைவர்களை சந்திப்பதற்காக ஜி20 மாநாட்டிற்கு வந்திருக்க வேண்டும். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் பல்வேறு நாடுகளிடையேயான உக்ரைன் உறவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.