பிரிட்டன் சாம்ராஜியத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம்(08/09/2022) இரவு தன்னுடைய 96-வது வயதில், வயது மூப்பு காரணமாக காலமானார்.  இவரது மரணத்திற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடலுக்கு இறுதி மரியாதை நாளை பிரிட்டன் அரண்மணையில் நடைபெறவுள்ளதால், அதில், அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 


மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு, சூரியன் மறையாத பிரிட்டன் சாம்ராஜ்ஜியம் குறித்த உரையாடல்கள் உலகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அதில், உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த பிரிட்டன், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துச் சென்றது. அதில் குறிப்பாக இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கோஹினூர் வைரம் முக்கியமானது. இது குறித்து இணையவாசிகள் தற்போது உரையாடத் தொடங்கியுள்ளனர். மேலும் கோகினூர் வைரம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்கள் குறித்தும் உரையாடி வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் இருந்து பிரிட்டன் தனது காலணி ஆட்சிக்காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விலைமதிப்பற்ற பொருட்களை எல்லாம் பிரிட்டன் மீண்டும் உரிய நாடுகளிடம் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறி வருகின்றனர். அவ்வாறு பிரிட்டன் எடுத்துச் சென்ற விலைமதிப்பில்லாத பொருட்களில் சிலவற்றைக் காண்போம். 






 வைரம் 


தென் ஆப்ரிக்காவின் பெரிய நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கல்லின் வைரம் உலகின் மிகவும் பழமையான வைரம் மற்றும் அதிக எடை கொண்ட வைரம் ஆகும். இது 1905 ஆம் ஆண்டில் கல்லின் என்பவரால் கண்டறியப்பட்டது. அதேபோல் இது இறிதியாக ஏழாம் எட்வர்டிடம் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தல் பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தற்போது ராணியின் செங்கோலின் தலையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் எடை 530 கேரட்கள் ஆகும். இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


திப்பு சுல்தான் 


1799 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் படை திப்பு சுல்தான் படைகளை வீழ்த்திவிட்டு இறந்த உடலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதுதான் திப்பு சுல்தானின் மோதிரம் . இந்த மோதிரம் 1,45,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ரொசோட்டோ கல் 


ரொசெட்டா ஸ்டோன் என்பது  மன்னர் ஐந்தாம் டோலமி  எபிபேன்ஸ் சார்பாக டோலமிக் வம்சத்தின்போது கிமு 196 இல் எகிப்தின் மெம்பிஸில் வெளியிடப்பட்ட ஆணையின் மூன்று பதிப்புகளுடன் பொறிக்கப்பட்ட கிரானோடியோரைட்டால் ஆன ஒரு கல் ஆகும். இந்த கல் ஹெலனிஸ்டிக் காலத்தில் செதுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தபோது, ​​1801 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்ட்ரியாவின் சரணாகதியின் கீழ் அந்தக் கல்லை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். 1802 ஆம் ஆண்டு முதல், இது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது அதிகம் பார்வையிடப்பட்ட பொருளாகும். எகிப்தில் நெப்போலியன் பிரச்சாரத்தின்போது பிரெஞ்சு அதிகாரி Pierre-François Bouchard என்பவரால் ஜூலை 1799 இல் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


எல்ஜின் மார்பில்ஸ் 


எல்ஜின் மார்பிள்ஸ் பார்த்தீனான் மார்பிள்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. "பார்த்தீனான் கிளாஸ் மார்பிள்களின் கீழ் உருவாக்கப்பட்ட மார்பிள் கலையின் கீழ் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், மற்றும் சிற்பி ஃபிடியாஸ் மற்றும் அவரது உதவியாளர்கள். அவை பார்த்தீனானின் அசல் பகுதிகள் மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் உருவாக்கப்பட்டது.  இதனை பிரிட்டன் அரசு தனது படையெடுப்புகளின் போது எடுத்துச் சென்றது.  1832 இல் ஒட்டோமான் பேரரசிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, புதிதாக நிறுவப்பட்ட கிரேக்க அரசு அதன் கொள்ளையடிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் கலையை மீட்டெடுக்க தொடர்ச்சியான திட்டங்களைத் தொடங்கியது. ஆனால் அது இதுவரை கைகூடவில்லை.