உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினரிடம் , நான் அழகாக இருப்பதால்தான் என்னை கைது செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் இணையத்தில் வைரலாகி வருகிறார்.





கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் பிரபல ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சில்லீஸ் டெக்ஸ்-மெக்ஸ அவுட்போஸ்ட் உணவகத்தில்  28 வயதுடைய  ஹெண்ட் புஸ்டாமி என்னும் பெண் ஆடர் செய்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் உணவிற்கான பணத்தை செலுத்தாமல் அந்த பெண் அங்கிருந்து வெளியேறிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த உணவகத்தினர் லாஸ் வேகாஸ் பெருநகர  காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளனர். இருந்தாலும் அந்த பெண்ணை கண்டறிய முடியவில்லை , உடனே விமான நிலைய காவல்துறையினர் லோக்கல் காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி , கொடுத்த அடையாளங்களுடன் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.





சாப்பிட்டுவிட்டு எஸ்கேப்  ஆன ஹெண்ட் புஸ்டாமி , அருகிலுள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு அருகில் நிம்மதியாக படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அவரை போலீசார்  வளைத்து பிடித்துள்ளனர். அப்போது புஸ்டாமி  முழு போதையில் இருந்திருக்கிறார்.  போலீசார் கைது செய்ய முற்பட்ட பொழுது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.  தங்களது அறிக்கையில் “ இந்த பெண் கைது செய்ய சென்ற அதிகாரிகள் மீது எச்சில் துப்பிவிடுவேன் என கூறியுள்ளார். மேலும் அதிகாரிகள் வக்கிரமானவர்கள் என்றும், அவர்கள் அழகாக யாரையும் பார்க்காததால், தன்னை பாலியல்  வன்கொடுமை செய்ய முயன்றனர் எனக் கூறினார்"  என்று  தெரிவித்துள்ளனர். சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றதால் இப்படியெல்லாம் கூறுவது அக்கப்போராக அல்லவா இருக்கிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.








விமான நிலைய நடத்தையை மீறியதற்காக அப்பெண் கைது செய்யப்பட்டு 1,000 அமெரிக்க டாலர் பிணையில் கிளார்க் கவுண்டி தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார்.Nevada-Las Vegas பல்கலைக்கழகத்தின் 2017 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர் Bustami. தற்போது தவறான நடத்தை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு , Detention Center  இல் அடைக்கப்படுள்ளார். புஸ்டாமி சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தைப் பெற்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அக்டோபர் 27 ஆம் தேதி மீண்டும் அவர்  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.