ஜப்பானில் விஷஊசி செலுத்தி  நோயாளிகளைக்கொன்ற வழக்கில், சம்பந்தப்பட்ட செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மரண தண்டனை ஏன் வழங்கவில்லை? என்ற எதிர்மறைக்கருத்துக்களையும் மக்கள் முன் வைத்துவருகின்றனர்.


மருத்துவத்துறையில் செவிலியர்களின் சேவை என்பது அளப்பெரிது என்று தான் கூற வேண்டும். மருத்துவர்களுக்கு அவர்களின் சிகிச்சைப்பணிகளில் உதவி செய்வது தொடங்கி, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பாதுகாவலராகவும் செவிலியர்கள் விளங்கிவருகின்றனர். இத்தொழிலில் முன்பு இருந்த சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவதற்கு பெண்கள் தான் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். பல நேரங்களில் மருத்துவர்களை விட செவிலியர்களின் பணி முக்கியமானதாக விளங்கும். அதிலும் நோயாளிகளுடன் கனிவாகப்பேசுவது முதல் அவர்களுக்கு மருத்துவமனைகளிலும், முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் பெருமைக்குரியவர்களாக தான் இந்த செவிலியர் உள்ளது. அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் இவர்களின் பணி முக்கியமானது. முன்களப்பணியாளர்களாகவும், மக்களின் சேவகர்களாகவும் பணியில் இருந்தார்கள். இப்படி மக்களின் பாதுகாப்பிற்கு மட்டும் உறுதுணையாய் இருப்பவர்கள், தங்களிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளைக் கொலை செய்வார்களா? என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். ஆனால் உண்மையில் தன்னிடம் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகளை விஷ ஊசி செலுத்திக் கொலை செய்துள்ளார் ஜப்பானைச்சேர்ந்த செவிலியர் ஒருவர்..





ஜப்பானைச்சேர்ந்த 34 வயதான அயுமி குபோகி என்ற செவிலியர் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்தார். இவர் பணிபுரிந்த காலங்களில் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளைக்கொன்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது.  விசாரணை நடத்தியப்போது இரண்டு மாதங்களில் 20 பேரைக் கொன்றிருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் யோகோஹாமா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைப் பெற்றுவந்தது.  நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, செவிலியர், தான் நோயாளிகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். செவிலியருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்,  செவிலியர் அயுமி குபோகி அவருடைய பணி நேரத்தில் நோயாளிகள் இறந்தாலும், இதற்கு அவர் தான் காரணம்? என  உறவினர்கள் யாரும் குற்றம் சாட்டவில்லை என்றும், நோயாளிகளின் உடல்நிலைக்குறித்தே இதுப்போன்று செய்தமைக்கு உறவினர்களுடன் உடன் இருந்தார்கள் என வாதிட்டார். மேலும் 70 வயதிற்கு மேற்பட்ட உடல்நலம் குன்றிய நோயாளிகள் இறந்தபோது, உறவினர்கள் நிம்மதி தான் அடைந்தார்கள் எனவும் நீதிமன்றத்தில் வாதிட்டப்பட்டது.





இதனையடுத்து வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஜப்பானைச்சேர்ந்த செவிலியர் அயுமி குபோகிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கப்படவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்ட செவிலியர் சுய நல நோக்கத்துடன் அப்பாவி மக்களைக் கொன்றுள்ளார். எனவே செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன் வைத்தனர். சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை செவிலியரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்வதேச மனித உரிமை ஆணையம் முதல் பல சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நிலையில், ஜப்பானில் செவிலியருக்கு ஏன் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.