ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், சூரியன்-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் பாயின்ட் 2 -இல் பணிபுரியும் விண்மீன் திரள்களின் நெரிசலான புலத்தை பதிவு செய்துள்ளது. அந்த புகைப்படத்தில் சிறிய மற்றும்அதிக தொலைதூர விண்மீன் திரள்களுடன் அடிவாரத்தில் பெரிய சுழல் விண்மீன்கள் ஆறு-புள்ளி diffraction spikesயால் சூழப்பட்டுள்ளதை காணலாம்.
LEDA 2046648 என பெயரிடப்பட்ட இந்த பெரிய சுழல் விண்மீன் பூமியிலிருந்து ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில், ஹெர்குலஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளது. ஆரம்பகால பிரபஞ்சத்தில் உள்ள தொலைதூர விண்மீன் திரள்களை அவற்றின் உருவாக்கம், பரிணாமம் பற்றிய விவரங்களைப் புரிந்துகொள்வதே வெப்பின் முக்கிய அறிவியல் இலக்குகளில் ஒன்றாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அளவுத்திருத்தத்தின் (callibration) போது இந்த விண்மீன் திரல்கள் படம் பிடிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும் விண்மீன் "புதைபடிவங்களை" தோண்டி எடுக்கும் ஜேம்ஸ் வெப்பின் திறனை சோதிக்க உதவிகரமாக இருந்தது என்றும், பண்டைய விண்மீன் திரள்கள் விண்வெளி விரிவடையும் போது, அவற்றின் ஒளி infrared raysஆக நீண்டுள்ளது, என்றும் நாசா தெரிவித்துள்ளது. விண்மீன் திரள்கள் உருவாகும்போது கனமான தனிமங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட, ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களின் இரசாயன கலவையை ஆய்வு செய்ய உலகின் மிக சக்திவாய்ந்த ஆய்வகம் பொருத்தப்பட்டுள்ளது.
Webb's Near-InfraRed Camera (NIRCam) ஐப் பயன்படுத்தி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வகம் சமீபத்தில் பிரபஞ்சத்தில் அளவிடப்பட்ட ஆழமான, குளிரான பனியின் பகுப்பாய்வை நடத்தியது. எதிர்காலத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை உருவாக்குவதற்கு கிடைக்கும் பனிக்கட்டி மூலப்பொருட்களின் மிக விரிவான பகுப்பாய்வு கார்போனைல் சல்பைட், அம்மோனியா மற்றும் மீத்தேன் ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளது.