வடகொரியா நாடு உலக நாடுகளில் மிக சிறிய நாடாக இருந்தாலும் அங்கு பல விஷயங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் யாராவது இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது அது சார்ந்த குற்றங்களில் ஈடுபடுவர் மீது மரணதண்டனை வரை வழங்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.



இந்தநிலையில், வடகொரியாவில் நெட்பிளிக்ஸ் செயலியில் வெப் சீரிஸ் பார்த்த  2 மாணவர்களுக்கு மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் புகழ்பெற்ற நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸான ‘ஸ்குவிட் கேம்’ தொடரை பென் ட்ரைவ் மூலம் ஒரு மாணவன் விற்பனை செய்ததாகவும், மற்றொரு மாணவன் அதை வாங்கி பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வெப் சீரிஸை பார்த்த மாணவனுக்கு ஆயுள் தண்டனையும், விற்பனை செய்த மாணவனுக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 


கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘ஸ்குவிட் கேம்’ தொடர் 111 மில்லியன் பார்வைகளுடன்  தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த தொடரை தென்கொரிய இயக்குனர் ஹுவாங் டோங் ஹூக் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, கடந்த மார்ச் மாதம் வடகொரியா நாட்டில் பள்ளி சிறுவன் ஒருவன் ஆபாசம் படம் பார்த்துள்ளான். இதை ஐபி அட்ரஸ் மூலம் கண்டறிந்து காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அந்த சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தை நாடு கடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நல்ல நேரத்தில் அந்த சிறுவனுக்கு மரண தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.


மேலும், அந்த சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் கடுமையான கூலி வேலை பார்க்க தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. காரணம், பள்ளி படிக்கும் மாணவன் தவறு செய்தால் அதில் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் பொறுப்பு இருக்கிறது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க : Ind-Pak 2021 WC: அதிகம் பேர் கண்டு களித்த சர்வதேச டி20 மோதல்! ரெக்கார்டு படைத்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண