தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் சீனா ஆரம்பம் முதலே தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் போன்றே சீன அரசாங்கம் சினிமா பிரபலங்களுக்கு உடை, டிஜிட்டல் சேவை போன்றவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 


தொடர்ந்து, சீனாவில் அதிகளவில் இளைஞர்கள் ஆன் லைன் விளையாட்டில் நேரத்தை கழித்துவருவதால் இரவு நேரங்களில் ஒரு மணிநேரம் மட்டுமே பெற்றோர்கள் அனுமதியுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்தது. அதேபோல், தற்போது சினிமா பிரபலங்கள் பொது இடங்களில் விலையுர்ந்த ஆடைகள் சீனா தடை விதித்துள்ளது. 


விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் இனி தங்களது செல்வாக்கை காட்டும் விதமாக ஆடம்பர உடைகளை அணிய கூடாது எனவும், தங்களது அனுபங்களை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பிரபலங்கள் குறித்த வதந்திகள், போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புதல், இரு பிரபலங்களின் ரசிகர்கள் தவறான வார்த்தைகளில் சமூக வலைத்தளங்களில் சண்டையிடுதல் போன்ற செயல்களை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த உத்தரவு வெளியான சில மணிநேரத்தில் 88 பிரபலங்கள் இனி சமூக வலைத்தளங்களில் லைவ் வீடியோ போட சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த 88 பிரபலங்களில் சமீபத்தில் வன்கொடுமை குற்றசாட்டு பிரச்சினையை எதிர்கொண்ட பாப் ஸ்டார் கிரிஸ் வூ-வும் இடம்பெற்றுள்ளார். 



முன்னதாக, 35 வயதான பெங் ஷூவாய் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளப் பக்கமான வெய்போவில் சீனாவின் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ஜாங் கயோலி மீது பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவிட்டார். அந்த பதிவில், ஜாங்கயோலி 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தன்னை கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலே அந்த பதிவு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் உலகம் முழுவதும் பரவியது.


இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை அளித்த பிறகு டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் மாயமானதாக தகவல் வெளியானது. அதன் பின்னர் அவர் ஒரு வீடியோவில் தோன்றியதாகவும் அவர் காணாமல் போகவில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் அது பழைய வீடியோ என்றும் அவர் காணாமல்தான் போய்விட்டதாகவும் ஒருதரப்பு கூறி வந்தது. இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை தொடர்பான பல கேள்விகளுக்கு ஒலிம்பிக் இயக்குநர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் பத்திரமாக இருக்கிறார். அவர் ஒலிம்பிக் இயக்குநருடன் வீடியோ காலில் பேசினார். அப்போது பேசிய வீராங்கனை, தான் பத்திரமாக இருப்பதாகவும், பீஜீங்கில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கியுள்ளதாகவும் கூறினார் என குறிபிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வீராங்கனையை சுற்றிய மர்மம் விலகியதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


ஏற்கனவே, சீனாவில் முகப்புத்தகம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்ட நிலையில், சீனாவினால் உருவாக்கப்பட்ட செயலிகளை மட்டுமே அந்நாட்டு மக்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண