சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இந்திய மதிப்பில் 20,000 கோடிக்கு மேல் அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முன் வந்திருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) வியாழன் அன்று இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்க அனுமதித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . 1948 இல் இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது அதற்குப்பின் ஒரு முறை கூட தற்போது இருக்கும் மிக மோசமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டது கிடையாது.உணவு பற்றாக்குறை எரிபொருள் பற்றாக்குறை உரப்பற்ற குறை மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் ஆகப்பெரிய அளவில் பற்றாக்குறையுடன் இருந்தன. இதனால் மிகப்பெரிய மக்கள் எழுச்சி காரணமாக அதிபர் மாறி புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கொண்டு இலங்கைக்கு இலங்கை பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டி ஐ எம் எஃப் இடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினார் இதனை அடுத்து இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் சம்மதம் தெரிவித்து.
IMF உடனான இலங்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த ஒப்பந்தம் நம்பிக்கை அளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நம்பிக்கையுடன் தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இருப்பினும் இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் ஆனது மிகுந்த கடுமையான பாதையில் பயணிக்க வேண்டி இருக்கிறது என்ற கருத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார்
செவ்வாயன்று, நாட்டின் நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, வருவாயை அதிகரிப்பதற்கும் மற்றும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் தயாரிக்கப்பட்ட தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கை என்பது ஆரம்ப நிலையில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் இலங்கை அதிகாரிகள் முன்னர் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த ஒப்பந்தமானது செல்லுபடியாக செல்லும்.
"ஊழியர் மட்ட ஒப்பந்தம் இலங்கைக்கான நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே" என்று சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி பீட்டர் ப்ரூயர் கூறியுள்ளதாக தெரிகிறது. "அதிகாரிகள் ஏற்கனவே சீர்திருத்த செயல்முறையைத் தொடங்கியுள்ளனர், அது உறுதியுடன் தொடர வேண்டும்." இன்று அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் கடன் தர ஒப்புக்கொண்டது இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இலங்கை தூதர் வியாழன் மிலிந்த மொரகொடா கூறியதாவது, “சர்வதேச நாணயம் நிதியம் மறுசீரமைப்புத் திட்டத்தின் வரையறைகளை உருவாக்கியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை வணிகக் கடன், இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடன்கள் மற்றும் உள்நாட்டுக் கடன்கள் என நிறைய படங்கள் உள்ளன.எனவே இதை எவ்வாறு சமநிலைப்படுத்துவது. பிறகு சில வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சர்வதேச நாணயம் நிதியம் தனது அறிக்கையில் இலங்கைக்கு கடன் தரும் நாடுகளிடமிருந்து கூடுதலாக நிதி உதவி கிடைக்க வேண்டும்,இது இலங்கைக்கு கடனுக்கான பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யவும், கடன்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கும் உதவும் என கூறி இருக்கிறது.
சர்வதேச நாளைய நிதியம், இலங்கையின் பொருளாதாரம் நிலைபெறவும் மற்றும் வளர்ச்சியை அடையவும் வழங்கப்படும் இந்த நிதி நான்கு ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும். மேலும் நிதி ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிப்பதற்கும், எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான புதிய விலையை அறிமுகப்படுத்துவதற்கும், சமூக செலவினங்களை அதிகரிப்பதற்கும், மத்திய வங்கியின் சுயாட்சியை உயர்த்துவதற்கும் மற்றும் குறைந்துபோன வெளிநாட்டு இருப்புக்களை மீண்டும் உருவாக்குவதற்கும்,இந்த நிதியானது உதவும்.மேலும் இது அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டி தரும் என்றும்,இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் மிக குறைந்த வருமானம் உடைய மக்களின் தொடங்கி, இந்தத் திட்டம் முக்கிய வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும். இந்தச் சீர்திருத்தங்களில் தனிநபர் வருமான வரியை மேலும் முற்போக்கானதாக மாற்றுவதும், பெருநிறுவன வருமான வரி மற்றும் VATக்கான வரி அமைப்பை விரிவுபடுத்துவதும். சர்வதேச நாணயம் நிதியம் இலங்கைக்கு வழங்க உள்ள இந்த நிதியானது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு கிடைத்த மரக்கட்டை போன்றதாகும் இதைப் பற்றி அவர் எப்படி தப்பிப்பாரோ அதைப் போன்று இலங்கை ஆனது இந்த நிதியை மிகச்சிறப்பாக பயன்படுத்தி தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு இலங்கை மக்களின் பிரார்த்தனையாக இருக்கும்