ஆன்டி சூப்பர் ஹுரோ வெனம் கேரக்டர் போன்று ஆடை அணிந்து தந்தை ஒருவர் தன்னுடைய மகனை பயமுறுத்தும் ப்ராங்க் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
சமீப காலங்களாக ப்ராங்க் வீடியோக்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் திரைப்படத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கதாபாத்திரங்களை அப்படியே வெளிக்கொணர்ந்து பல்வேறு திறமைகளும் ப்ராங்க் வீடியோக்களின் வாயிலாக வெளிப்படுகிறது. அப்படித்தான் தன் மகனிடம் நண்பர் போல் பழகி அப்பா ஒருவர், தன் மகனை ப்ராங்க் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் தேர்வு செய்தது ஆன்டி சூப்பர் ஹூரோவான வெனம் கேரக்டர்தான்.. இந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் முகமூடியை அப்பா அசெம்பிள் செய்வதைப்போன்று வீடியோ தொடங்குகிறது. பின்னர் அவர்களுடைய வீட்டிற்குள் கருப்பு நிற ஆடை அணிந்து கொள்வதோடு வெனம் கேரக்டர் போன்ற மாஸ்கினை அணிந்து மாடிப்படிகட்டுகள் வழியாக நடந்துவருகிறார். அப்போது வீட்டிற்குள் தற்செயலாக வந்த மகன் என்ன செய்தார் தெரியுமா? இதோ சற்று நீங்களும் இந்த வீடியோவில் பாருங்கள்…
எதார்த்தமாக மகனை கேலி செய்வது போன்று அமைந்திருந்த வீடியோ இணையவாசிகளை அதிகம் கவர்ந்துள்ளது. சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட இந்த வீடியோதான் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர். இதோடு ”மனிதனிடம் உள்ள அச்ச உணர்வு. தான் யார் என்று பார்க்காமலேயே திகைத்துப்போக வைத்தது என்றும், அருமையான வீடியோ, இதனை நான் நேரில் பார்த்திருந்தால் நிச்சயம் அச்சத்தில் கத்தியிருப்பேன் என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர். முன்னதாக இன்ஸ்டாவில் இந்த வீடியோ வெளியானபோது அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகவில்லை. ஆனால் youtube ல் வெளியானதையடுத்து மக்களிடம் அதிக லைக்குளைப்பெற்றுவருகிறது. இதில் குறிப்பாக திரில்லர் படத்தில் வருவது போன்ற சவுண்ட் தான் இணையவாசிகளை அதிகம் கவர்ந்திருக்கிறது என்று கூற வேண்டும்.
மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான சூப்பர் திரைப்படம்தான் வெனம். ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தோடு நேரடித்தொடர்புடைய வெனம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது. கற்பனை கதாபாத்திரமான வெனம் கேரக்டரை குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தாலும் ஒருவித பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்யும். அந்தளவிற்கு அந்த கேரக்டரின் முகம் அமைந்திருக்கும். படத்தில் பார்க்கும் போது அப்படியென்றால் நம் கண்முன்னால் நேரில் பார்த்தால் திகைத்து தான் நிற்போம்.