கிங்ஸ் தீவில் உள்ள மர ரோலர் கோஸ்டர் ஒன்று உலகின் நீளமான ரோல்ர் கோஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளது. ஓஹியோவில் உள்ள கிங்ஸ் தீவில் உள்ள ஒரு புகழ்பெற்ற பூங்காவில் மரத்தால் செய்யப்பட்ட ரோலர் கோஸ்டர் ஒன்று மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இதனை தி பீஸ்ட் என அழைக்கின்றனர். முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இந்த ரோலரில் பயணிப்பதற்காகவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் , கிங்ஸ் தீவில் குவிந்து வருகின்றனர்.நீண்ட பாரம்பரிய மரத்தால் லேமினேட்  செய்யப்பட்ட இந்த டிராக் ரோலர் கோஸ்டர் 2,286 மீட்டர்  நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்த ரோலர் கோஸ்டரில் சவாரிகள் 3 நிமிடங்கள் 40 வினாடிகள் நீடிக்கும் மற்றும் மணிக்கு 104 கிமீ வேகத்தில் ஓடுகிறது.







ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையை முன்னிட்டு இந்த ரோலர் கோஸ்டர் சவாரிகள் களைக்கட்டுகிறது . அதன்படி வருகிற மே மாதம் சீனன் சமயத்தில் வழக்கமான நீளத்தை விட (2,286 மீட்டர் ) ,   7,359 அடி கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் எந்தப் பூங்காவும் முறியடிக்க முடியாத ஒரு சாதனைதான்  இந்த பூங்காவில் அமைந்துள்ள ரோலர் கோஸ்டரில் இருக்கிறது.


அது  உலகின்  மிக நீளமான மர ரோலர் கோஸ்டர் என்பதுதான்.137 அடி மற்றும் 141 அடி செங்குத்து பாதையில் இருந்து இந்த ரோலர் கோஸ்டர் இறங்கக்கூடியது. 137 அடி துளியின் அடிப்பகுதியில் 125 அடி நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதை, எட்டு திருப்பங்கள், இறுதியில் 540 டிகிரி ஹெலிக்ஸ் சுரங்கப்பாதையில் அதிவேகம் போன்ற அம்சங்களையும் பீஸ்ட் கொண்டுள்ளது. மணிக்கு 64.77 மைல்கள் கடந்து செல்லக்கூடியது தி பீஸ்ட் ரோலர் கோஸ்டர்.


கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய ரோலர் கோஸ்டடை புதுப்பிக்கும் திட்டத்தின் அடிப்படையில்   ​​முதல் வீழ்ச்சியானது 45 டிகிரியில் இருந்து 53 டிகிரிக்கு மாற்றப்படவுள்ளது.  பூங்காவின்  அறிக்கையின் படி, இந்த திட்டம் மே மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதிரியான பழமை வாய்ந்த ரோலர் கோஸ்டர் , இன்றளவும் பயன்பாட்டில் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.