கடந்த திங்கட்கிழமை அதாவது  மாலை அமெரிக்காவில் உள்ள மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத் ஃபோர்க் எனும் பால் பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.  முதலில் தீ பண்ணை முழுவதும் பரவி பெரிய வெடி விபத்தினைப் போல் உருவெடுத்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டது.  மிகப்பெரிய பால் பண்ணையில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன் பின்னர்,  கால்நடைகள் இறந்த அளவைக் கணக்கிடும் போது தீயணைப்பு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.  இந்த விபத்தினால் சுமார் 18 ஆயிரம் மாடுகள்  இறந்துள்ளன. 


இந்த தீவிபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு பால் பண்ணை தொழிலாளி ஆபத்தான தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிசையினால் அவரது உயிருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், இந்த விபத்தில் மனித உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


விபத்து ஏற்பட்ட பால் பண்ணைக்கு வந்த  கவுண்டி நீதிபதி மாண்டி க்ஃபெல்லர் இந்த தீவிபத்து ஏதாவது மின்சாதனத்தில் இருந்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளார். அதேபோல், டெக்சாஸ் தீயணைப்பு அதிகாரிகள் அதற்கான காரணத்தை விசாரணை செய்வார்கள் எனவும் அவர் கூறீயுள்ளார். 


வாஷிங்டனை மைய்யமாகக் கொண்ட விலங்கு நல வாரியம் , 2013 இல் கொட்டகை மற்றும் பண்ணையில்  ஏற்படும் தீ விபத்தை கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து, இது தான் அமெரிக்காவில் அதிக  கால்நடை உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து என கூறுகின்றனர். 


இந்த விபத்து இதற்கு முன்னர் இதுபோல் ஏற்பட்ட விபத்தினால்  உயிரிழந்த மாடுகளின் எண்ணிக்கைய விட அதிகம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.  அதாவது 2020 ஆம் ஆண்டு நியூயார்க்கின் அப்ஸ்டேட் என்ற பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் , சுமார் 400 மாடுகள் இறந்தது என்று  பாலிசி அசோசியேட் அல்லி கிரேன்ஜர் என்பவர் கூறியுள்ளார்.