Elon Musk: எலான் மஸ்க் பகிர்ந்துள்ள வீடியோவில், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர், வித்தியாசமான உடையில் ஒய்யார நடையை மேற்கொண்டுள்ளனர்.
எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ:
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பல்வேறு அரசியல் மற்றும் உலகத் தலைவர்கள், மாடல் அழகிகளை போன்று விதவிதமான உடைகளை அணிந்து, ஒய்யார நடைபோடுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, 11 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
உலக தலவர்களின் ஒய்யார நடை:
எலான் மஸ்க் பகிர்ந்துள்ள வீடியோவின் தொடக்கத்தில், ஆடம்பரமான வெள்ளை கோட்டில் போப் ஆண்டவர் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மெல்ல நடந்து வர, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீன அதிபர் ஜி ஜிங் பிங் மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வித்தியாசமான மற்றும் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமான உடைகளை அணிந்து ஒய்யார நடையில் சென்றுள்ளனர்.
வீடியோவில் பெரு முதலீகள்:
அவர்கள் மட்டுமின்றி எலான் மஸ்க், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் , அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் ஆப்பிள் சிஇஒ டிம் குக் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர். இறுதியில் அண்மையில் மைக்ரோசாஃப் கிளவுடில் ஏற்பட்ட கோளாறை குறிப்பிடும் விதமாக, நீல நிற திரையுடன் கூடிய மடிக்கணியை கையில் வைத்திருப்பது போன்ற பில் கேட்ஸின் வடிவமும், எலான் மஸ்க் பகிந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.