பிக்பாஸ் நிகழ்ச்சிகள் அதன் ரியாலிட்டி தன்மைக்காக பொதுமக்களிடையே பெரிதும் பிரபலம்.ஒரே வீட்டில் விடப்படும் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் எப்படிப் பழகுகிறார்கள் ஒருவருக்கு ஒருவர் புரிதலுடன் எப்படி அணுசரித்துச் செல்கிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் மையப்புள்ளி. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் பெரிய பாஸாக 2000வது ஆண்டின் முற்பகுதியிலேயே அதே போன்றதொரு நிகழ்ச்சி உருவானது.அதன் வீடியோ ஒன்றுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


ஒரு சர்ச்சைக்குரிய சமூக பரிசோதனையின் கீழ், ஒரு வீட்டில் மொத்தம் பத்து ஆண் பிள்ளைகள் ஒரு வாரமாக, முற்றிலும் மேற்பார்வையின்றி விடப்பட்டனர். 2000ம் ஆண்டின் முற்பகுதியில், சேனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர்கள் "பாய்ஸ் அலோன்" என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்க முடிவு செய்தனர். இதில் 11 முதல் 12 வயதுடைய பத்து சிறுவர்கள் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்னும் இடத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு அழகான வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு முன் சிறுவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காததாலும், அவர்களை மேற்பார்வையிட பெரியவர்கள் யாரும் இல்லாததாலும் இதில் நிறைய விஷயங்கள் பதிவு செய்யப்படுகிறது.இந்த எபிசோடைத் தொடர்ந்து பத்து பெண்கள் குழுவில் அதே சோதனை நடத்தப்பட்டது. இது மிகவும் எளிய பரிசோதனை போலத் தெரிந்தாலும் பல வித சிக்கல்கள் இதில் பதிவு செய்யப்பட்டது. 


சிறுவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் குழுக்களாகப் பிரிந்து, வீட்டில் கிடக்கும் பொருட்களைக் கொண்டு உயிர் ஜீவித்தனர். அவர்கள் பெரும்பாலும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தானியங்கள் மற்றும் குளிர் பானங்களை சாப்பிட்டு உயிர் பிழைத்தனர்.


மறுபுறம், சிறுமிகளுக்கு இடையிலும் பல சிக்கல்கள் நிலவியது, ஆனால் அதில் ஒரு ஒழுங்கமைப்பு இருந்தது. அவர்களில் சிலர் உணவு சமைப்பதையும் வீட்டை சுத்தம் செய்வதையும் தங்கள் பொறுப்பாக ஏற்றுக் கொண்டனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் மக்களிடையே வைரலாகி வருகிறது.


அந்த வைரல் வீடியோ உங்களுக்காக..