Layoff: 2 நிமிட கூகுள் மீட்! ஒரே அடியாக 200 பேரை கழற்றிவிட்ட ஐடி நிறுவனம் - கதறி அழும் ஊழியர்கள்!

2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. 

Continues below advertisement

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

Continues below advertisement

கூகுள் மீட்  அழைத்து பணிநீக்கம்:

குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன.   

மேலும்,  வருங்காலத்திலும் இந்த பணிநீக்கங்கள் தொடரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று கூட  ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.  இப்படிப்பட்ட சூழலில் தான், ஸ்டார்ப் ஆப் நிறுவனம் ஒன்று 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

அமெரிக்காவை தளமாக கொண்டு Frontdesk என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2 நிமிட அவசர கூட்டத்திற்கு அழைத்து 2 நிமிடத்தில் 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளார் Frontdesk நிறுவனத்தின் சிஇஓ. இதில்,  முழுநேரம், பகுதிநேரம், ஒப்பந்ததார்கள் என அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  முதலீட்டை திரட்ட முடியாததால் ஊழியர்கள் 200 பேரை Frontdesk  நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. 

தொடரும் பணிநீக்கங்கள்:

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜெராக்ஸ் நிறுவனம் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில், 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது ஜெராக்ஸ்.

இந்த பணிநீக்கத்த் தொடர்ந்து, ஜெராக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் சரிவை கண்டது. மேலும், கூகுள் நிறுவனம் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட, பேடிஎம் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஊழியர்களின் செலவினத்தில் 10 முதல் 15 சதவீதம் சேமிக்க முடியம் என்பதால் பேடிஎம் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க

Smart Phones Launch 2024: ஸ்மார்ட்ஃபோன் வாங்க திட்டமிருக்கா.. ஜனவரியில் சந்தைக்கு வரும் 14 புதிய மாடல்கள்..உங்களுக்கான லிஸ்ட் இதோ

UPI Payment: யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வந்தது நியூ ரூல்ஸ் - நோட் பண்ணிக்கோங்க மக்களே!

Continues below advertisement
Sponsored Links by Taboola