Air India: பெரும் பதற்றம்.. உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வரச்சென்ற ஏர் இந்தியா விமானம்..

உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Continues below advertisement

கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் உண்டாகும் சூழல் நீடித்து வருகிறது. இதன்காரணமாக அந்த நாட்டில் இருக்கும் பிற நாட்டவர்களை வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில் உக்ரைன் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியா தூதரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

Continues below advertisement

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர டாட்டாவின் ஏர் இந்திய நிறுவனம் சிறப்பு விமானங்களை அனுப்ப உள்ளது. அதன்படி வரும் 22, 24 மற்றும் 26ஆம் தேதிகளில் ஏர் இந்தியா விமானம் உக்ரைன் சென்று அங்கு இருக்கும் இந்தியர்களை அழைத்து வர உள்ளது. இது தொடர்பாக டாட்டா நிறுவனம், “உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா வர பதிவு செய்தவர்களை அழைத்து வர ஏர் இந்தியாவின் (ஏஐ-1946) விமானம் செல்ல உள்ளது. அதில் முதல் விமானம் இன்று இரவு அங்கு செல்ல உள்ளது. மேலும் 24 மற்றும் 26ஆம் தேதி மேலும் இரண்டு விமானங்கள் உக்ரை சென்று இந்தியர்களை அழைத்து வரும்” எனத் தெரிவித்துள்ளது. 

முன்னதாக உக்ரைன் நாட்டில் நிலவும் சூழல் தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. அதில் இந்தியா தூதர் திருமூர்த்தி, “உக்ரைன் நாட்டில் நிலவும் பதற்றமான சூழலை தனிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் அந்தச் சூழல் உலகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரச்னை ராஜாங்க உறவு ரீதியில் தீர்த்து கொள்ள வேண்டும் என்பதே இந்தியாவின் எண்ணமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement