இமயமலை சார்ந்த பகுதிகளில் இருந்து முதல் 'வெளிப்படையான' பால் புதுமையினராக இருப்பது மட்டுமல்லாமல், மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பூட்டானை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் போட்டியாளராக தாஷி சோடன் தேர்வாகி உள்ளார். பிப்ரவரி 2021 வரை பௌத்த நாடுகளில் தன்பாலீர்ப்பு தடைசெய்யப்பட்டு இருந்தது. அவர்களது தண்டனைச் சட்டத்தில் "இயற்கை விதிகளுக்கு எதிரான பாலியல் நடத்தை" என்று விவரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிஸ் பூட்டான்
கடந்த மாதம் 'மிஸ் பூட்டான் 2022'-ஆக சோடன் தேர்வு செய்யப்பட்டது, அந்நாட்டின் LGBTQ சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகையில் சுமார் 8,00,000 பேருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது. அவரது 14 வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்துள்ளார். நிறைய ஆராய்ச்சி மற்றும் சுயபரிசோதனைக்குப் பிறகு தான் வெளியே வந்ததாகச் கூறினார்.
சிறுபான்மையினரின் குரல்
அவர் பேசுகையில் "நான் பூட்டான் சமூகத்திற்காக மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தினருக்காகவும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி போன்ற பெரிய மேடைகளில் பேசுகிறேன். எல்லோர் கவனிப்பும் படும் போது என்னால் அவர்களின் குரலாக இருக்க முடியும்", என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் மிகவும் வலுவாக எதிர்த்துள்ளனர், ஆனால் சோடன் அவர்களிடம் எடுத்துக்கூற, அவர்களும் புரிந்துகொண்டு ஆதரவு அளித்துள்ளனர்.
குடும்பத்தினர் குறித்து
குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டது குறித்து பேசிய அவர், "முதலில், அவர்கள் ஏற்றுக்கொள்வது அவசியம். அவர்களுக்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன், ஏனென்றால் பலருக்கு அந்த ஏற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. நான் வாழ்க்கையில் நன்றாக இருப்பேன், என் சொந்தக் காலில் நிற்க முடியும், நான் ஒரு சுதந்திரமான பெண்ணாக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புவதனால், என் பாலுணர்வு அவர்களுக்கு முக்கியமில்லை என்று நினைக்கிறேன்", என்றார்.
எதிர்ப்பும் ஆதரவுகளும்
மிஸ் பூட்டானாக தேர்வு செய்யப்பட்டு மிஸ் யூனிவர்ஸிற்கு பூட்டானை பிரதிநிதித்துவப் படுத்துவது வரை சென்றவுடன், ஆன்லைனில் பல எதிர்ப்புகளை சந்தித்த அவருக்கு உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவுகளும் வரத்தொடங்கின. பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங், பிரதமரான பின்னும் வார இறுதி நாட்களில் இன்னும் மருத்துவராகப் செயல்பட்டு வருகிறார், அவர் தனிப்பட்ட முறையில் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
எதிர்கால நம்பிக்கை
க்வீர் வாய்ஸ் ஆஃப் பூட்டான் மற்றும் பிரைட் பூட்டான் போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளும், லக்-சாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் வக்கீல் மூலம் ஆதரவை வழங்கியுள்ளன. இப்போது சோடன் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் மிஸ் யுனிவர்ஸ் அரங்கில் பூட்டானைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், நாட்டின் LGBT இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என்று பலர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்