நேபாளத்தில் விபத்துக்குள்ளான தாரா ஏர் விமானத்தில் பயணித்த 22 நபர்களும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் 4 பேர் பயணம்
நேபாள நாட்டின் சுற்றுலா தளமான பொக்காராவிலிருந்து புறப்பட்ட தாரா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற விமானம், நேற்று (மே. 29) காலை விபத்துக்குள்ளானது.
புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே, விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்தியர்கள் 4 பேர், ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோா் இருந்தனர்.
TN RTE Admission: தனியார் பள்ளிகளில் தொடங்கியது குலுக்கல் முறையில் இலவச மாணவர் சேர்க்கை!
மீட்புப் பணியில் தாமதம்
இந்நிலையில் விமான பாகங்கள் முஸ்டாங் மாவட்டம், சனோஸ்வர் என்ற பகுதியில் விழுந்த கிடந்ததைக் கண்டறிந்த ராணுவத்தினர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். ஆனால், நேற்று மாலை அதிகரித்த பனிப்பொழிவு காரணமாக தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து இன்று காலை ராணுவத்தினர் மீண்டும் பணிகளைத் தொடங்கிய நிலையில், தற்போது `14 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2016க்கு பிறகு மீண்டும் விபத்து
கடந்த 2016ஆம் ஆண்டும், இதேபோல் பொக்காராவிலிருந்து ஜோம்சோம் பகுதிக்கு பறந்த தாரா ஏர் நிறுவனத்துக்கு சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 23 நபர்கள் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்