ஆப்கானிஸ்தானில் புதிய அரசு உருவாக்கும் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான், சீனா, ரஷ்யாவுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட்டதாக தலிபான் இன்று தெரிவித்தது.


தலிபான்களுக்கு ஆதரவான ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இஸ்லாமிய எமிரேட்  புதிய அரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பல நாடுகளுடன் தலிபான்கள் ரஷ்யாவை அழைத்திருப்பதை ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.


பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை கைப்பற்றியதாக கூறிவிட்டு, கடந்த வாரம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை தலிபான் மிக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.


Task force pineapple: ஆஃப்கான் மக்களைக் காப்பாற்றிய ஆபரேஷன் அன்னாசிப்பழம் - இது Task Force Pineapple-ன் கதை!


தலிபானால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் உறுப்பினர் கலீல் ஹக்கானி அரசாங்கத்தை அமைப்பது குறித்து பல்வேறு குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா கடந்த வாரம் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார். தலிபான்கள் காபூலில் அரசாங்கத்தை அமைப்பார்கள் மற்றும் அமைப்பின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் புதிய அரசாங்கத்தின் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.




மேலும், “தலிபான்கள் சொந்தமாக ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும். ஆனால், அவர்கள் இப்போது சமூகத்தின் அனைத்து கட்சிகள், குழுக்கள் மற்றும் பிரிவுகளுக்கு சரியான பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு நிர்வாகத்தைக் கொண்டிருக்க கவனம் செலுத்துகின்றனர்," என்று அவர் கூறினார்.


தலிபானுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஜாமியத் இ இஸ்லாமி ஆப்கானிஸ்தானின் தலைவருமான குல்புதீன் ஹக்மத்யார் மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் சகோதரர் ஆகியோருக்கு தலிபான் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தலிபான்கள் தங்கள் அரசுக்கு ஆதரவளிக்க மற்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததைத் தொடர்ந்து, மின்னல் வேகத்தில் தலிபான்கள் நாட்டை கைப்பற்றினார்கள். அமெரிக்கா தனது கடைசி படைகளை நாட்டிலிருந்து திரும்பப் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி காபூல் கைப்பற்றப்பட்டது.  


"இந்த வெற்றியின் மூலம், நமது நாடு போரின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டது" என்று தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார். 


Taliban News : தலிபான் அட்டூழியம்...கொண்டாட்டத்துக்காக சுட்டதில் 17 பேர் பலி!