மிக நீளமான சுரங்கப்பாதை வழியாக விமானம் பறந்து கின்னஸ் உலக சாதனையையும் டாரியோ கோஸ்டா பெற்றார்.


பிரபல எனர்ஜி ட்ரிங்க் நிறுவனமான ரெட் புல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அது தற்போது பலரால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், ஒரு இத்தாலிய விமானி டேரியோ கோஸ்டா துருக்கியில் அமைந்துள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக சிரமமின்றி விமானத்தை செலுத்தினார், இதை கண்ட இணையவாசிகள் ஆச்சர்யத்தில் உறைந்தனர்.



வைரல் வீடியோவில் பைலட் விமானத்தை இரண்டு சுரங்கங்களுக்குள் புகுந்து பறக்கிறார். செப்டம்பர் 4 அதிகாலையில் அவர் தனது ரேஸ் விமானத்தை நாட்டின் புகழ்பெற்ற கட்டல்கா சுரங்கப்பாதைகள் வழியாக சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கச் செய்தார்.


ரெட் புல் வெளியிட்ட பதிவில் எழுதியிருந்ததாவது, "டாரியோ கோஸ்டா இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை ஓட்டிய முதல் நபராக ஆகிறார், நாங்கள் வாயடைத்துப் போய் இருக்கிறோம்."


ரெட் புல் பகிர்ந்த ஒரு சமூக வலைத்தள வீடியோ பதிவில், கோஸ்டா பின்வருமாறு கூறினார், "எல்லாமே மிக வேகமாக நடப்பதாகத் தோன்றியது, ஆனால் நான் முதல் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்தபோது, ​​விமானம் வலதுபுறம் நகரத் தொடங்கியது, அப்போது என் மூளை மெதுவாக செயல்பட்டது. நான் தொடர்ந்து போராடி எதிர்வினையாற்றினேன், அடுத்த சுரங்கப்பாதையில் நுழைய சரியான பாதையில் விமானத்தை திருப்புவதில் கவனம் செலுத்தினேன். பிறகு, என் மனதில், எல்லாம் மீண்டும் வேகமெடுத்தது. வெற்றிகரமாக முடித்தேன். " என்றார்.



அவர் இந்த செயலை செய்த முதல் நபர் ஆனது மட்டுமல்லாமல், விமானம் மூலம் பறந்த மிக நீளமான சுரங்கப்பாதைக்கான கின்னஸ் உலக சாதனையையும் பெற்றார்.


பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இந்த வீடியோ, ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. இது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றது. இருப்பினும் சிலர் அதற்கு எதிராக கருத்துகளையும் கூறினர். ட்விட்டரில் ஒருவர் "அது சில தவறான விமானம் இயக்கும் திறன்" என்று கூறி தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த வீடியோ எப்படி படமாக்கப்பட்டது என்று மேலும் லாஜிக் கேள்விகள் கேட்டார். ஒரு சிலர் அதில் ஈர்க்கப்படவில்லை. ஒரு பயனர் இதை 'அர்த்தமற்றது' என்று கூட அழைத்தார்.


ஹங்கேரியின் விமானப் ஏவியேஷன் பீட்டர் பெசன்யே கோஸ்டாவுக்கு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, இந்த சுரங்கப்பாதை விமான இயக்குதல் திட்டத்திற்கு 40 பேர் கொண்ட குழு, சிறப்பாக உருவாக்கப்பட்ட பயிற்சி தொழில்நுட்பம் சேர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பு தேவைப்பட்டது. அதன் மூலமாகவே இது சாத்தியம் ஆனது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI