ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு மக்கள் மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்தது. கடுப்பாடுகள் அதிகரித்தாலும் மறுபக்கம் சிக்கலிலும் சிக்கியிருக்கிறது ஆப்கானிஸ்தான். தலிபான் ஆட்சிக்கு திரும்பிய பிறகு, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து வரும் நிதி உதவி நிறுத்தப்பட்டது. இதனால், இச்சமயத்தில் ஆப்கானிஸ்தானின் நிதி நிலவரம் மிகவும் மோசமாகிவிட்டது. இந்த நாடு, விரைவில் கடுமையான பசி மற்றும் வறுமையின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக பல ஊடகச் செய்திகளில் கூறப்பட்டது.
இதை தவிர்க்க,குறைந்தபட்சம் தங்கள் வங்கிக் கணக்குகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று உலகின் பல நாடுகளுக்கு தலிபான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் பீப்பாய் பீப்பாயாக மதுவை,கால்வாயில் ஊற்றி வீடியோவை வெளியிட்டுள்ளது தாலிபான். ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இஸ்லாமியர்கள் மதுபானத்தை தயாரிக்கவோ, விற்கவோ, அருந்தவோ கூடாது என பதிவிட்டுள்ளனர். தாலிபான்கள் ஆட்சிக்கு பிறகு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். போதை தடுப்பு மட்டுமின்றி, போதையை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தலையை எடுங்கடா... துணிக்கடை பொம்மைகளின் தலைகளை அகற்றச்சொன்ன தலிபான்கள்.. ஏன் தெரியுமா?
இதுமட்டுமின்றி, பழைய ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலான பகுதிகளில் பெண்களுக்கான இடைநிலைப் பள்ளிகள் இன்னும் மூடப்பட்டு உள்ளன. தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் படிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதற்கு பல நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர். இதில், வகுப்பில் உள்ள மாணவர்களிடம் இருந்து பிரிந்து மாணவிகள் திரைக்கு மறுபுறம் தனியாக அமர ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேலும் முடியை மறைப்பதில் இருந்து முகத்தையோ அல்லது முழு உடலையோ மறைப்பது வரை ஹிஜாபுக்கான விளக்கம் மாறுபடும். பெரும்பாலான ஆப்கானிஸ்தான் பெண்கள் ஏற்கனவே தலையில் முக்காடு அணிந்திருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இவை அனைத்திற்கும் மேலாக, இசை மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பாகவும் தலிபான்கள் முக்கிய முடிவுகளை எடுத்தது. இனி மக்கள் தங்கள் வாகனங்களில் இசையை ஒலிக்கச் செய்யக்கூடாது என்று தாலிபன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்