தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு கருதி பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று கூறினார். தலிபான்கள் கடைசியாக ஆப்கானிஸ்தானை ஆண்டது போல அல்லாமல், இம்முறை பெண்களிடம் அதிக சகிப்புத்தன்மையுடன் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இது உலக நாடுகள் உற்றுநோக்குவதால் அவர்களை நம்ப வைக்க தலிபான் எடுக்கும் முயற்சிகள் என விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.



முஜாஹித்தின் கூறுகையில் "கடைசியாக 1996 மற்றும் 2001 க்கு இடையில் தலிபான்கள் பெண்களை வேலைக்கு செல்வதை தடுத்து, துணையின்றி வெளியில் செல்ல மறுத்திருந்தது, முழுதாக உடலை மறைக்க கட்டாயப்படுத்தியது. அப்படி இம்முறை இருக்காது" என்றார்.





ஆப்கானிஸ்தானிற்கான நிதியுதவியை உலக வங்கி நிறுத்திய பிறகு, ஐ.நா பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சகாயம் செய்ய முன்வந்துள்ளது. வீட்டில் இருந்து பெண்கள் வேலை செய்யலாம். வெளிநாட்டு உதவிகளை பெரிதும் நம்பியிருக்கும் ஆப்கானிஸ்தானை ஐ.நா சபை, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மனித உரிமை மீறல்கள் செய்தது பற்றிய அறிக்கைகளை வெளிப்படையாக, உடனடியாக வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளது. 


இதற்கிடையில், தலிபான் அதன் புதிய சகாப்தம் மிகவும் நன்றாக இருக்கும், நல்லாட்சியை வழங்கும் என்று உறுதியளித்தது, ஆனால் தலிபான் தலைவர்கள் யாரும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று இதுவரை உத்தரவாதம் அளிக்கவில்லை.


ஆப்கானியர்கள் வெளியேறாமல் இருப்பதை தடுக்க, அமெரிக்காவிற்கு கேடு கொடுத்திருந்தது. மேலும் வரும் காலங்களில் உள்ளூர் ஆப்கானிஸ்தானியர்களுக்கு சில முன்னுரிமைகள் கிடைக்கும் என்று சில அறிவிப்புகளை கொடுத்து மக்களை தங்க வைக்க முயல்கிறது. இருப்பினும், சிறப்பு புலம்பெயர்ந்த விசா (SIV) திட்டத்திற்கான சில விண்ணப்பங்கள் வந்திருந்தாலும் - அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கனியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருக்கிறது.



கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தம் 19,000 பேர் வெளியேறினர், இதில் 42 அமெரிக்க இராணுவ விமானங்களில் 11,200 பேர் பறந்தனர், மேலும் 7,800 பேர் கொலிஷன் பார்ட்னர்களால் வெளியேற்றப்பட்டனர் என்று பென்டகன் புதன்கிழமை அறிவித்தது. காபூலின் விமான நிலையத்தில் நடந்த கொடூரமான மேற்கத்திய வெளியேற்ற நடவடிக்கைதான் சமீபத்திய நாட்களில் பல ஆப்கானியர்கள் நாட்டை விட்டு தப்பிக்க ஒரே ஒரு சிறு வாய்ப்பாக இருந்தது.