14 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு:


ஓ.பன்னீர்செல்வத்தை, அதிமுக விலிருந்து நீக்குவதாக இபிஎஸ் அறிவித்திருந்தார். பின்னர், இபிஎஸ்-ஐ அதிமுக விலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்நிலையில் அதிமுக தலைமைக்கு கடும்  போட்டி நிலவி வரும் சூழலில்,14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அதிரடி காட்டி வருகிறார். 


அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்:


சில தினங்களுக்கு  முன்பு ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் உள்ளிட்ட சிலரை அதிமுக-விலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை தொடர்ந்து இபிஎஸ் உள்ளிட்ட சிலரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 


பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்


இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க, வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும், பிரதமர் சந்திக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுக நிலவி வரும் பிரச்னை குறித்து பேச இருப்பதாகவும் சிலர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.


பலத்தை காமிக்கும் ஓபிஎஸ்:


அதையொட்டி, தன் பலத்தை காமிக்கும் வகையில், அதிமுகவில் 14 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதாக ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளராக, முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட்ராமனும், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக திரு. ஆர். தர்மரும்


மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக, திரு. R.கோபாலகிருஷ்ணனும், கோவை பாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக கோவை K. செல்வராஜூம்


வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக கொளத்தூர் D. கிருஷ்ணமூர்த்தியும் , தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக பாபுவும்,


தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளராக ரெட்சன் C. அம்பிகாபதியும், வட சென்னை வடக்கு (கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக J.K. ரமேஷும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக திரு. M.R. ராஜ்மோகனும்  நியமிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.


பலத்தை வலுப்படுத்தும் ஓபிஎஸ்:


இதற்கு கட்சியிலிருந்து, பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட உறுப்பினர்களை, மீண்டும் கட்சியில் செயல்படலாம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஓபிஎஸ், தனக்கான ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண