Sweden PM | பதவி விலகிய ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர்; பதவியேற்ற சில மணிநேரங்களில் என்ன நடந்தது?

எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன்....

Continues below advertisement

மக்டேலேனா ஆண்டர்சன் புதன்கிழமையன்று ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். "நான் பதவி விலக விரும்புவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன்" என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் "எதிர்காலத்தில் கூட்டணி எதுவும் இல்லாம் ஒரே கட்சியின் ஆட்சியில் நான் பிரதமர் பதவியை வகிப்பேன் என்று நம்புகிறேன். அரசமைப்பின்படி கூட்டணியில் உள்ள ஒரு கட்சி விலகினால் மற்றொரு கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது விதி" என்று தெரிவித்தார் மக்டேலேனா. பதவி ஏற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது ஸ்வீடன் நாட்டு அரசியலை பரபரப்பாக்கி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழல்கள் இடையே அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆவல் உலக நாடுகளிடையே தொற்றிக்கொண்டுள்ளது.

Continues below advertisement

கடந்த புதன்கிழமையன்று ஸ்வீடனின் சட்ட நடைமுறைப்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கை பெற்று மக்டெலெனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வீடனின் பெண் வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 100 வருடங்களுக்கு பிறகு 54 வயதாகும் சமூக ஜனநாயக கட்சியை (Social Democratic Party) சேர்ந்த மக்டெலெனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஆட்சியமைத்த கூட்டணி கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. தாங்கள் முன்மொழிந்த பட்ஜெட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவிக்கவில்லை என்ற காரணத்தால் க்ரீன் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. அதன் காரணமாக தற்போது மக்டேலேனா பதவி விலகும் சூழல் உருவாகியுள்ளது. மக்டேலேனா ஆண்டர்சனின் பதவி விலகலுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கட்சி தலைவர்களிடம் ஆலோசிக்கப்படும் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

முன்னாள் நீச்சல் வீராங்கனையான மக்டேலேனா 1996-ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அப்போதைய பிரதமரான கோரன் பெர்சனுக்கு அரசியல் ஆலோசகராக அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். கடந்த ஏழு வருடங்களாக நிதியமைச்சர் பதவி வகித்து வருகிறார். மக்டேலேனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக அதுவரை பெண் பிரதமர் இல்லாத ஒரே நார்டிக் நாடாக ஸ்வீடன் இருந்தது. ஸ்வீடன் அரசியலில் உள்ள கடினமான அடுக்குகளை கொண்டு பார்த்தால் மக்டேலேனாவுக்கு இது கடைசி வாய்ப்பு என்றெல்லாம் கூறி விட முடியாது என்கிறார்கள் ஸ்வீடன் நாட்டு அரசியல் விமர்சகர்கள். மீண்டும் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்டேலேனா ஆண்டர்சன் வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கூட்டணியிலிருந்து விலகிய க்ரீன் கட்சி அவருக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இருப்பினும் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் வலதுசாரி கட்சியான எதிர்க்கட்சியால் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பட்ஜெட்டையே பின்பற்ற வேண்டும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola