ஐரோப்பாவை சேர்ந்த ஸ்வீடன் நாட்டு அரசு உடலுறவை (SEX) விளையாட்டாக அங்கீகரித்து ஜூன் 8 ஆம் தேதி போட்டிகள் நடைபெறும் என்ற அறிவிப்பை ஸ்வீடன் அரசின் விளையாட்டுத்துறை கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது


ஸ்வீடன் அரசு அறிவிப்பு:


ஸ்வீடன் அரசு உடலுறவை ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஜூன் 8 ஆம் தேதி தனது முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்கள் தினமும் ஆறு மணி நேரம் வரை செக்ஸ் அமர்வுகளில் ஈடுபடுவார்கள் எனவும் பாலியல் போட்டியின் வெற்றியாளர்களை நடுவர் குழு முடிவு செய்வார்கள் மற்றும் பார்வையாளர்களின் முடிவுகளும் வெற்றியாளர்களை தேர்ந்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டது. தம்பதியினரிடையே உள்ள கெமிஸ்ட்ரி, பாலினம் பற்றிய அறிவு, சகிப்புத்தன்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்த செய்தி வெளியாகி மக்களிடையே பெறும் அதிர்ச்சைய ஏற்படுத்தியது. 


போட்டி விவரம்:


இந்த போட்டியில் செடக்சன், பாடி மசாஜ், சிற்றின்ப மண்டலங்களை ஆராய்தல், வாய்வழி உடலுறவு, வெவ்வேறு பொசிசன்களில் முயற்சி செய்வது, மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பலமுறை உச்சக்கட்டத்தை அடைவது போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படும் என தகவல்கள் வெளியானது.  போட்டி மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நிலைக்கும் முன்னேற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் தேவை என்றும் குறிப்பிடப்பட்டது. 


உண்மை என்ன?


இந்த செய்திகள் வெளியான நிலையில் சமூக வளைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களும் இது தொடர்பான செய்திகள் பதிவு செய்து வந்தது. இந்நிலையில் ஒரு சில ஊடகங்கள் இந்த தகவல் பொய்யானது என குறிப்பிட்டு பதிவு செய்தது. இந்நிலையில், பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு ஸ்வீடன் அரசின் விளையாட்டுத்துறை கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் ஸ்வீடன் விளையாட்டுக் கூட்டமைப்பில் இல்லை எனவும் அரசுத் தரப்பு விளக்கமளித்துள்ளது.


இது தொடர்பாக ஸ்வீடன் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பார்த்தபோது, செக்ஸ் கூட்டமைப்பு என எந்த பிரிவும் கேர்க்கப்பட்வில்லை என்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதம் வெளியான செய்தியில் ஸ்வீடிஷ் பாலியல் கூட்டமைப்பின் விண்ணப்பம் முழுமையடையாமலும், சில தேவைகளைப் பூர்த்தி செய்யாமலும் இருந்ததால் நிராகரிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. 


ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பின் தகவல் தொடர்பு தலைவர் அன்னா செட்ஸ்மேன், இந்த கூற்றுக்களை நிராகரித்து, "சர்வதேச ஊடகங்களின் சிலவற்றில், ஸ்வீடிஷ் விளையாட்டுக் கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது முற்றிலும் தவறான தகவல்”  என குறிப்பிட்டுள்ளார்.