கொல்கத்தாவில் இருந்து 250 கிமீ தெற்கிலும், புவனேஷ்சரிலிருந்து 170 கிமீ வடக்கேயும் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 120 பேரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும், 900 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த விபத்து உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலை பதிவிட்டு வருகின்றன. அந்த வகையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பற்றிய படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்களை என் மனதில் வைத்திருக்கிறேன். இந்த கடினமான நேரத்தில், கனடா மக்கள், இந்திய மக்களுடன் நிற்கிறார்கள்.” என பதிவிட்டு இருந்தார்.
நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால், “இன்று இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் டஜன் கணக்கான உயிர்கள் பலியாகியிருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடி மற்றும் அவரை உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பத்தினர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தைவான் அதிபர் சாய் இங்-வென்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களிம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்ட ட்வீட்டில், துயரமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செனட்டருமான பென்னி வோங், இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் நடந்த பேரழிவுகரமான ரயில் விபத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.