Sweden New Sport: ஷாக் கொடுத்த உடலுறவு போட்டி... ஸ்வீடன் நாட்டு விளையாட்டுத்துறை மறுப்பு...!

ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில், உடலுறவு (SEX) கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை என அந்நாட்டு விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

Sweden New Sport : ஸ்வீடன் அரசிடம் இருந்து இந்த விளையாட்டு குறித்து அறிக்கையோ அல்லது சர்வதே அளவிலான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Continues below advertisement

சுவீடன் அரசு அறிவிப்பு:

ஸ்வீடன் அரசு உடலுறவை ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அடுத்த வாரம் தனது முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்கள் தினமும் ஆறு மணி நேரம் வரை செக்ஸ் அமர்வுகளில் ஈடுபடுவார்கள் எனவும்,  பாலியல் போட்டியின் வெற்றியாளர்களை நடுவர் குழு முடிவு செய்வார்கள் மற்றும் பார்வையாளர்களின் முடிவுகளும் வெற்றியாளர்களை தேர்ந்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. தம்பதியினரிடையே உள்ள கெமிஸ்ட்ரி, பாலினம் பற்றிய அறிவு, சகிப்புத்தன்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிந்ததாக கூறப்படுகிறது. 

இந்த போட்டியில் செடக்சன், பாடி மசாஜ், சிற்றின்ப மண்டலங்களை ஆராய்தல், வாய்வழி உடலுறவு, வெவ்வேறு பொசிசன்களில் முயற்சி செய்வது, மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பலமுறை உச்சக்கட்டத்தை அடைவது போன்ற பல்வேறு பிரிவுகள் பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.  போட்டி மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலைக்கும் முன்னேற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் தேவை எனவும் ஒவ்வொரு துறையிலும் 5 முதல் 10 புள்ளிகளைப் பெறலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து சர்ச்சைகள் எழுந்தன. 

சுவீடன் அரசு மறுப்பா?

இந்நிலையில், ஸ்வீடன் அரசிடம் இருந்து இந்த விளையாட்டு குறித்து அறிக்கையோ அல்லது சர்வதே அளவிலான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புமோ வெளியாகவில்லை. இந்நிலையில், இது போலி செய்தி என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதனை ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ் பாஸ்டன் உறுதி செய்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டி தொடர்பாக வந்த விண்ணப்பங்களை நிராகரித்ததாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில், உடலுறவு (SEX) கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை என அந்நாட்டு விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த போட்டி குறித்து பேசிய சுவீடன் செக்ஸ் கூட்டமைப்பின் தலைவரான டிராகன் பிராட்டிஸ், மற்ற எந்த விளையாட்டையும் போலவே, உடலுறவில் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. எனவே, இந்த களத்திலும் மக்கள் போட்டியிடத் தொடங்குவது தர்க்கரீதியானது. இந்த போட்டியில் எதிராளிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதே குறிக்கோள்” என்று சொல்லியிருந்தார். இருப்பினும் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஸ்வீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ் பாஸ்டன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola