✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Sunita Williams:விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்.! எமோஷனலாக பேசிய தாய்.!

Advertisement
செல்வகுமார்   |  31 Aug 2024 09:37 PM (IST)

Sunita Williams Mother: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் குறித்து அவரது தாய் மற்றும் கணவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்

NEXT PREV

ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை  சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.

Continues below advertisement

நீட்டித்த பயணம்:

முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இவர்கள் பயணம் கணிசமாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா அவசரமாக தீவிர முயற்சித்து வருகின்றன.

இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

Continues below advertisement

ஸ்பேஸ் எக்ஸ்

இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலம், செப்டம்பரில் வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு  செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

சுனிதா வில்லியம்ஸ் தாய்:

பூமி திரும்புவதில் தாமதம் குறித்து தெரிவிக்கையில் “ நான் கவலைப்படவில்லை, நான் அவளுக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியும். அவர் ஒரு அனுபவமிக்க விண்வெளி வீராங்கனை. அவர் 400 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் இருந்துள்ளார்" என்று தாய் கூறினார்.

தனது தாயுடன் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "கவலைப்பட வேண்டாம்" என்று தனது தாயிடம் கேட்டுக் கொண்டார், மேலும் எல்லாம் சரியாகிவிடும்" என தெரிவித்தார்.

இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸின் கணவர் மைக்கேல் ஜே வில்லியம்ஸ், தெரிவிக்கையில் "அது தான் அவளுடைய மகிழ்ச்சியான இடம்" என்று தெரிவித்தார்.

Published at: 31 Aug 2024 09:36 PM (IST)
Tags: NASA ISS boeing Sunita Williams
  • முகப்பு
  • செய்திகள்
  • உலகம்
  • Sunita Williams:விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்.! எமோஷனலாக பேசிய தாய்.!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.