கோடை காலம் தற்போது வாட்டி வதைத்து வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் பெரும்பாலும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தண்ணீரை பாதுகாப்பது அவசியமானது. இல்லாவிட்டால் அடுத்த போர் தண்ணீருக்கானதாக மட்டுமே இருக்கக் கூடும். தண்ணீர் ஆதாரத்தைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் சிற்சில பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தாலே தண்ணீரை சேமிக்கலாம்.


ப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்கள்: ஃபர்ண்ட் லோடிங் வாஷிங் மெஷின்கள் டாப் லோடிங் வாஷிங் மெஷினைவிட 70 சதவீதம் குறைவாக தண்ணீரையே உபயோகிக்கும். டாப் லோடிங் வாஷிங் மெஷின்கள் துணிகளை ஒவ்வொன்றாக தண்ணீர் பகுதிக்கு எடுத்து துவைத்துக் கொள்கிறது. டாப் லோடிங் வாஷிங் மெஷினில் துணிகள் தண்ணீரில் மிதக்கும். இதனால் தண்ணீர் பயன்பாடு அதிகமாக இருக்கும். வாஷிங்மெஷின் பயன்படுத்தாமல் துணிகளை துவைக்கும்போது இன்னும் தண்ணீர் சிக்கனமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


டிஷ்வாஷர்ஸ்: கையால் பாத்திரங்களைக் கழுவுவதைக் காட்டிலும் டிஷ் வாஷரில் கழுவும்போது தண்ணீர் பயன்பாடு குறைவாக இருக்கும். பாஸ்ச் பிராண்ட் டிஷ்வாஷர்கள் பயன்பாட்டுக்கு சிறந்தது. இவை ஜெர்மனியில் தயாரிக்கப்படுகிறது. இவை ஓராண்டுக்கு 18 ஆயிரத்து 250 லிட்டர் தண்ணீர் சேமிக்கக் கூடியது. இதனால் டிஷ்வாஷர் பயன்படுத்தும் போது தண்ணீரை சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர். ஆனால் இந்திய சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலாக்கள், எண்ணெய்களை ஒப்பிடும்போது இந்த வகை டிஷ்வாஷர்களின் தண்ணீர் சேமிப்பு எவ்வளவு தூரம் ஒத்துவரும் என்பது கேள்விக்குறி என்றே சிலர் கூறுகின்றனர்.


ஷவர் டைம்: ஷவர் பாத் என்பதுதான் இப்போது பரவலான குளியல் முறையாக இருக்கிறது. வாலியில் தண்ணீர் நிரப்பி அளவாக தண்ணீர் பயன்படுத்திக் குளிக்கும் பழக்கமெல்லாம் இங்கே இருப்பதில்லை. இந்நிலையில் ஷவர் டைமிலும் தண்ணீர் சேமிக்கும் டிப்ஸ் இருக்கிறது எனக் கூறுகின்றனர். அதாவது லோ ஃப்ளோ ஷவர் ஹெட்ஸ் பயன்படுத்தும்போது தண்ணீரை அது குறைந்த வேகத்தில் வெளியேற்றும். அதனால் தண்ணீரை சேமிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.
 
வாட்டர் ப்யூரிஃபையர்: ஆர்ஓ வாட்டர் ப்யூரிஃபையர் மல்டிஸ்டேஜ் ப்யூரிஃபிகேஷன் பயன்படுத்துவதால் குறைந்த அளவே தண்ணீர் வீணாகும். அவ்வாறாக வெளியேறும் தண்ணீரையும் தோட்டத்திற்கு பாய்ச்ச, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எனப் பயன்படுத்தலாம். அதேபோல் இப்போது சந்தைகளில் ஜீரோ வாட்டர் வேஸ்டேஜ் தொழில்நுட்பத்துடன் கூடிய ப்யூரிஃபையர்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.  


சாயில் மாய்ஸ்சர் மீட்டர்: சாயில் மாய்ஸ்சர் மீட்டர் என்பது தோட்டக்கலை நிபுணர்கள் நன்கு அறிந்த விஷயம். இதை தோட்டங்களில் பயன்படுத்தும் போது ஓவர் வாட்டரிங் தவிர்க்கப்படும். இதனால் இரண்டு நன்மைகள். ஒன்று தண்ணீர் சேமிப்பு. இன்னொன்று செடிகள் அழுகாமல் தவிர்க்கப்படும். இந்த ஆண்டு உலக தண்ணீர் தினம் மாற்றத்தை துரிதப்படுத்துவோம் 'Accelerating Change' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்படுகிறது.