அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் வில்லியம்ஸ்பர்க் பாலத்தில் போய் கொண்டிருந்த ரயிலின் மேற்கூரையின் மீது ஏறி ஆபத்தாக பயணித்ததை ஒரு கும்பல் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது. இணையத்தில் வெளியான அந்த வீடியோவில், ரயிலின் மீது குறைந்தபட்சம் எட்டு பேர் ஏறுவதை காணலாம்.






 


அதில் சிலர் மேற்கூரையின் மீது உற்சாகமாக துல்லி குதித்து தாவிச் செல்வதையும் மீதம் உள்ளவர்கள் உட்கார்ந்திருப்பதையும் காணலாம்.






இந்த வீடியோ வெளியானதிலிருந்து பயங்கரமாக வைரலாகிவருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்த்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட ஒருவர், "பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், 80களில் இது சகஜம்" என்றார்.


இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


"பார்க்க மிகவும் பயமாக இருக்கிறது. இவர்கள் காட்டுத்தனமானவர்கள்" மற்றொருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


இதுகுறித்து நியூயார்க் போஸ்டில் வெளியான செய்தியில், இந்த வீடியோ குறித்து அறிய வந்ததையடுத்து, சந்தேகத்திற்குரியவர்கள் மீது அத்துமீறி நுழைதல் மற்றும் பொறுப்பற்ற முறையில் ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என தெரிவித்துள்ளது.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு


இதே போன்று, கடந்த ஆண்டு, ரயிலின் மேற்கூரையில் பயணித்த ஒருவர் ரயில் பாதையில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இதற்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண