அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான டிக்டாக் பிரபலம் கூப்பர் நோரிகா, மால் ஒன்றில் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இவரது டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், "யார் யாரெல்லாம் இளம் வயதில் இறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.
கூப்பர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கூப்பர் நோரிகாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. விரும்பத்தகாத கோணத்தில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெரிவிக்கையில், மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, கூப்பர் நோரிகா இறப்பு தொடர்பாக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
யார் இந்த கூப்பர் நோரிகா..?
19 வயதான டிக்டாக் பிரபலம் கூப்பர் நோரிகா அமெரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு டிக்டாக் பக்கத்தில் 1.77 மில்லியன் பாலோவர்ஸ்களும், இன்ஸ்டாகிராமில் 427,000 பாலோவர்ஸ்களும் இருந்துள்ளனர். இவரது பெரும்பாலான வீடியோகளில், ஸ்கேட்போர்டிங் மற்றும் ஃபேஷன் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் டிக்டாக் நட்சத்திரங்கள் மற்றும் இசைக்கலைஞர்களான ஜேக்ஸ்டிஎன் மற்றும் நெஸ்ஸா பாரெட் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.
கடந்த ஜூன் 4 ன் தேதியன்று கூப்பர் மன ஆரோக்கியத்திற்கான ஒரு டிஸ்கார்ட் பக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், தான் தனது ஒன்பது வயதிலிருந்தே போதைப் பழக்கத்துடன் போராடி வருவதாகவும், மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதை இயல்பாக்குவதற்கு இந்த பக்கத்தை உருவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இதேபோல் போதைப் பழக்கத்தில் இருந்து வெளியேற நினைப்புக்கு மக்களுக்கு மறுவாழ்வு வழங்குவதே தனது குறிக்கோளாக இருந்தது. கடினமான காலங்களில் கடந்து செல்லும் மக்களை ஒன்றிணைக்க டிஸ்கார்ட் உதவும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்