அமெரிக்காவில், பிரபல சப்வே (subway) உணவகக் கிளையில் மயோனைஸ் அதிகம் இருந்ததாகக் கூறி பெண் ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் உள்ள பிரபல சப்வே (subway) உணவகக் கிளையில் வாங்கப்பட்ட சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர், அங்கிருந்த பெண் ஊழியரை அவரது மகனின் கண் எதிரிலேயே சுட்டுக் கொன்றுள்ளார்.


மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.


 






இந்நிலையில், கொலையாளி சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகம் இருப்பதாகக் கூறி முதலில் வாக்குவாதம் செய்ததாகவும், ஒரு கட்டத்தில் திடீரென பொறுமை இழந்து அங்கிருந்த பெண் ஊழியர்கள் இருவரை அந்நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


உணவகத்தில் இருந்த ஐந்து வயது மகனின் கண் எதிரே 26 வயது பெண் ஊழியர் உயிரிழந்த நிலையில், 24 வயது பெண் ஊழியர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


இது குறித்து முன்னதாகப் பேசிய அட்லாண்டா காவல் துறையினர், கொலையாளி கடைக்குள் வந்தது முதலே வித்தியாசமாக நடந்து கொண்டார் என்றும் தன் கோபத்தை சாண்ட்விச் சரியில்லாததாகக் கூறி இரண்டு பெண்களிடமும் தீர்த்துக் கொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண