டெஸ்லா எலன் மஸ்க் ட்வீட் செய்வது என்றால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு நிமிடம் தனது இயக்கத்தை நிறுத்திவிட்டு அவர் என்ன ட்வீட் செய்துள்ளார் என்பதைத்தான் கவனிக்கும். ட்விட்டரை வாங்குவேன் என 2017ல் அவர் ட்வீட் செய்தார். தற்போது ட்விட்டர் அவர் வசம் உள்ளது. அடுத்து கொக்கோகோலாவை வாங்குவேன் என ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரில் இரண்டாவது மிக அதிக அளவில் லைக் செய்யப்பட்டுள்ள ட்வீட் அது. 


தற்போது அவர் அடுத்த ட்வீட் ஒன்றில் பரபரப்பாகி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சட்டப் பிரதிநிதியான அலெக்ஸாண்ட்ரியா ஓகாசியா கோர்டெஸுடன் அவர் ட்விட்டரில் உரையாடியதுதான் தற்போது  வைரலாகி வருகிறது. 


அலெக்ஸாண்ட்ரியா,"வெறுப்புக் குற்றங்களின் தாக்கம் என்னவென்பதைக் கூட்டாக வலியுறுத்துவதில் அலுத்துப்போன சில பில்லியனர்கள் ஈகோ பிரச்சனையால் ஒருதலைப்பட்சமாக ஒரு பெரிய தகவல் தொடர்பு தளத்தை கட்டுப்படுத்தி அதை வளைக்கிறார்கள். ஏன் என்றால் டக்கர் கார்ல்சன் மற்றும் பீட்டர் தியேல் போன்றவர்கள் அவரை இரவு உணவிற்கு அழைத்துச் சென்று அவரை ஸ்பெஷலாக கவனித்தனர்" எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த எலான் , “என்னுடன் ஃப்ளர்ட் செய்வதை நிறுத்துங்கள் எனக்கு வெட்கமாக உள்ளது” என நகைச்சுவையாகக் கூறியிருந்தார். 






அதற்கு பதில் ட்வீட் செய்திருந்த அலெக்ஸாண்ட்ரியா, “நான் ஜூக்கர்பர்க்கை பற்றிக் குறிப்பிட்டேன், இருந்தாலும் பரவாயில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். 



இதுதான் தற்போது வைரல் டாக் ஆகி வருகிறது. உலகின் மிகப்பெரும் பணக்காரர்,டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியிருந்தார். உலக அளவில் இது பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு, டிவிட்டர் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி (Jack Dorsey) மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்று அமெரிக்க பிரபல இதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது.


டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, எலான் மஸ்கிடம், ஒரு சமூக ஊடகம் என்பது தனிநபரின் கீழ் இயங்கும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் டிவிட்டரின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கு பின் அவர் பில்லியனர்ஸ்  நண்பர்களின் அறிவுரையும், பரிந்துரையும் இருக்கிறது என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.


இந்த பில்லியனர்ஸ் குழுவில் பேபால் நிறுவனர்கள், நிர்வாக அதிகாரிகள் என பலர் இருந்திருக்கிறார்கள்.பிரபல பில்லியனர்ஸ் பீட்டர் தீல் (Peter Thiel), ரோல்ஃப் போதா (Roelof Botha), மேக்ஸ் லேவ்சின்( Max Levchin)  ஆகியவர்கள் எலான் மஸ்கின் முடிவுக்கு பின் இருந்திருக்கிறார்கள்.


எலான் மஸ்க் மற்றும் டோர்சி இருவருக்கும் இடையே நீண்ட நாட்களுக்கு முன்பிலிருந்து நல்ல நட்புறவு இருந்துவருகிறது. மேலும், டோர்சி, எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதை தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். அவர், டிவிட்டருக்கு எலான் மஸ்க்தான் ஒரே தீர்வு என்று குறிப்பிட்டிருந்தார்.