பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐ.நா. அகதிகள் அமைப்பின் நல்லெண்ண தூதருமான ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் நாட்டில் போரில் பாதிக்கப்பட்டவர்களையும், குழந்தைகளையும் சந்தித்தார். உகரைன் நாட்டில் உள்ள லிவ் நகருக்குச் சென்று பேரழிவால் தவிக்கும் மக்களைச் சந்தித்து பேசினார். ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் பயணம் குறித்த வீடியோக்களை அவரது ரசிகர்கள்  நெகிழ்ந்து பாராட்டுவது இணையத்தில் வைரலாகிவருகிறது.




ரஷ்யா உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க தொடுத்த போரின் விளைவால் மக்கள் கடுமையாக பாதிக்கட்டனர். போர் பாதிப்புக்குப் பின் சுமார் ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி, புலம் பெயர்ந்தவர்கள் முகாமில் உள்ளவர்களை ஏஞ்சலின் ஜோலி சந்தித்து உரையாடினார்.


ஏஞ்சலினா, லிவிக் நகரில் உள்ள பேக்கரிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். இந்த எதிர்பாராத நிகழ்வால் மக்கள் மகிழ்ந்தனர்.






லிவிக் நகரில் உள்ள கிரமாஸ்டொக் ( Kramatorsk railway station ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் சந்தித்து பேசினார்.  அவர்களிடம் போர் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.


இது குறித்து லிவிக் மாகாண  கவர்னர் Maksym Kozytskyy கூறுகையில், ‘ஏஞ்சலினா ஜோலி போரில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைச் சந்தித்தார். குழந்தைகள் அவரிடம் பேசி மகிழ்ந்தனர். ஒரு சிறுமி முந்தையநாள் இரவு கண்ட கனவை அவரிடம் பகிந்துக்கொண்டார். மேலும், ஏஞ்சலினா அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினார். இங்கு மீண்டும் நிச்சயம் வருவேன் என்றும் குழந்தைகளிடம் உறுதி அளித்தார்.” என்றார்.






அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் ஏஞ்சலினா புகைப்படம் எடுத்து கொண்டார்.






இது குறித்து ஏஞ்சலினா, போர் பாதிப்பால் குழந்தைகள் எவ்வளவு அதிர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் அவர்கள், எதிர்கொள்ளும் வலியை நான் உணர்கிறேன். இடர் காலத்தில் அவர்களுக்கு ஆறுதலாக தேற்றினால், அது அவர்களுக்கு நல்ல உணர்வை வழங்கும் என்று தனது உக்ரைன் பயண அனுபங்களைப் பகிர்ந்துள்ளார்.