இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் என இவற்றை அடக்குவதாக கூறி முப்படையினரையும் வைத்து இலங்கை அரசு அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


 இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் தற்போது இலங்கையின் முப்படையினர் வசம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.ஆகவே இந்த தருணத்தில் இலங்கைக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினால் ,முப்படையிரை  எங்கும் அசைக்க முடியாது . அவர்களை நாடு முழுவதும் பாதுகாப்பு என்ற போர்வையில் நிலை நிறுத்த வேண்டியதாக இருக்கும். அதனால் முன்னதாகவே இவ்வாறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட கூடும் என அறிவித்துவிட்டு ,ஒரு செக்யூரிட்டி சோன் ,(ஒரு பாதுகாப்பு  சூழல்) வேண்டுமென ஒரு மக்கள்  மனதில் பதிய வைத்து அரசுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்க முற்படலாம்.


 2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் எவ்வாறு நடந்தது , இவற்றுக்கு இலங்கைகுள்ளே யார் ஒத்துழைப்பு வழங்கியதுபோன்ற விஷயங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் என கூறி மக்களை அச்சுறுத்துவதில் எந்த வகை நியாயம் முப்படையினரோடு சேர்ந்து முழு நாட்டையும் கைக்குள் வைத்திருக்க ராஜபக்சவினர் போடும் திட்டமாகவே இது பார்க்கப்படுகிறது .ஆகவே தற்போது பெட்ரோலிய பொருட்கள் மற்றும் ஏனைய எரிபொருள் விநியோகம் என்பது இலங்கையின் முப்படையினரிடம்  இருக்கிறது.




 இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருள்  நிரப்பு நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு இருக்கும் ராணுவத்தினர் , மக்கள் மீது நடத்தும் அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவதாக மக்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.


இந்த விஷயத்தில் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை பயங்கரவாதத்தோடு ஒப்பிட்டு சித்தரிக்கும் நிகழ்வுகளைத் தான் அரசியல்வாதிகளும் இலங்கை பாதுகாப்புத் துறையும் முன்னெடுத்திருப்பதை காண முடிகிறது.


 கரும்புலிகள், கருப்பு ஜூலை என சொல்லும் போது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இருந்து ராணுவ படையணியை அகற்றாது அங்கேயே வைத்திருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள் என்பதே இந்த விசயத்தின் ஊடாக தெளிவாகிறது .இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க வழி தேடச் சொன்னால் ,முழு இலங்கை மக்களுக்கும் பயங்கரவாதம் என பேய் காட்டி வருகிறார்கள்.




தேசிய பாதுகாப்பு கொள்கை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நாட்டு மக்களை முட்டாள்தனம் ஆக்குவது இலங்கை அரசின் ஏமாற்று வேலை என அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலரும் பேசத் தொடங்கியுள்ளனர்.வரலாற்று ரீதியாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களை  குறி வைத்தே ,சிங்கள பெரும்பான்மை அரசு இப்படியான ஒரு கண்துடைப்பு நாடகத்தில் ஈடுபட்டு வருகிறது.அதேபோல் இவ்வாறான  நாடகங்களை தொடர்ந்து கண்டிப்பதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அணுர குமார திசநாயக்க தெரிவித்திருக்கிறார்.


மேலும் இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள பொருளாதார நெருக்கடி ,மக்களின் போராட்டங்களை ,குரல்களை முடக்கவே இவ்வாறு மீண்டும் அரசால் நாடகம் காட்டப்படுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார் .


தற்போதைய அரசுக்கு எதிரான போராட்டங்களையும், மக்களின் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பரவப்படுவதாகவும் அவர் சந்தேகம் எழுப்பி இருக்கிறார் .


 





அதேபோல் நாட்டின் பல பகுதிகளிலும் , எரிபொருள் நிலையங்களிலும் போடப்பட்டுள்ள முப்படைகளினால் மக்களுக்கு பெரும் அராஜகங்கள் விளைவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.


 அண்மையில் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருநாகல்  பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், அங்கு எரிபொருள் வாங்க சென்ற ஒரு நபரை அங்கிருந்த ராணுவ அதிகாரி  காலால் உதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


 எனினும் இந்த விஷயம் தொடர்பாக இராணுவ விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


ஆகவே இலங்கையில் ஒவ்வொரு நாளும் மக்கள், பொருளாதார ரீதியாக வாழ்வா சாவா என்ற போராட்டத்தை  நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.


 இந்நிலையில் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்தை பார்க்காமல் ,தங்களுக்கு வாக்கிட்டு வெற்றி பெறச் செய்த மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.


 பாதுகாப்பு என்ற ஒன்று ,தற்போது அவசியமே இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், ஏன்  மீண்டும் மீண்டும் பாதுகாப்பு என,   அந்நாட்டுக்கு தற்போது தேவையே இல்லாத ஒரு தலைப்பைப் பற்றி பேசி வருவது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.