அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை மீட்கப்பட்டது .



துப்பாக்கிச்சூடு :


அமெரிக்காவின் சிகாகோ மாகணத்தில் கடந்த 4 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு Highland Park எனும் புறநகர்ப் பகுதியில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது  உயர் மாடிக் கட்டடத்தின் கூரையிலிருந்து மர்ம நபர் ஒருவர் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 36 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் பெற்றோரை இழந்த 2 வயது குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.







அதிர்ச்சியில் குழந்தை:


மீட்கப்பட்ட அந்த குழந்தையின் பெயர் எய்டன் என்பதும் அவரது பெற்றோர் இரினா மெக்கார்த்தி மற்றும் கெவின் மெக்கார்த்தி என்பதும் தெரிய வந்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.  அங்கிருந்த மற்ற நபர்களால் குழந்தை பாதுகாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  தாத்தா பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்ட எய்டன் “ அம்மா, அப்பா சிக்கிரம் வந்துவிடுவார்கள் “ என கூறிக்கொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குழந்தை விரைவில் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குழந்தையின் நலனுக்காக சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டும் பணிகளும் தொடங்கியுள்ளது.  மகிழ்ச்சியாக அணிவகுப்பு காண சென்ற குழந்தை தாயையும் , தந்தயையும் இழந்து நிற்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.







குற்றவாளி கைது :


அணிவகுப்பு சமயத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 22 வயதான ராபர்ட் இ கிரிமோ (Robert E Crimo)  தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்  மீது கொலை , கொள்ளை என ஏழு வழக்குகள் உள்ளன. மேலும் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக தான் கொலை செய்ய போவதாக கூறியிருக்கிறான். அவனது வீட்டில் இருந்து கத்தி உள்ளிட்ட பல ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.