உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் துருப்பிடித்திருக்கும் நிலையில் இருப்பதாகவும், அதை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று  Marianne என்ற பிரெஞ்சு மொழியில் வெளியாகும் இதழின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவருக்கு வயது 135. இன்னும் பிரம்மிப்பூட்டும் வகையில் வானுயர்ந்து நிற்கும் ஈபிஸ் டவரில் துருப்பிடித்தப்படி இருக்கிறது. இதை சரிசெய்ய நடைவடிக்களுக்கு பதிலாக அதற்கு 60 மில்லியன் மதிப்பில் காஸ்மெடிக் பெயிண்ட் பூச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக பாரிஸ் நகர் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடிக்கப்பட இருக்கிறது.


இரும்புகளை வைத்து மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஈபிஸ் டவர் 324 மீட்டர் உயரமுள்ள டவர். இது Gustave Eiffel என்பவரால் கட்டப்பட்டது. உலக அளவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலம் இது. ஆண்டுதோறும் 60 லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.


ஈபிள் டவர் குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டிருக்கும் இதழ், “ ஈபிள் டவர் முழுவதுமாக சீரமைக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.




இந்தக் கட்டுரையில், தற்போது ஈபிள் டவரின் நிலையை Gustave Eiffel கண்டால், வேதனையில் அவருக்கு மாரடைப்பே வந்துவிடும் என்றும் குறிப்பிட்டு ஈபிள் டவர் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.


Societe d'Exploitation de la Tour Eiffel (SETE) என்ற நிறுவனம் ஈபிள் டவரின் பராமரிப்பு பணிகளை கவனித்து வருகிறது. ஆனால், இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


20-வது முறையாக ஈபிள் டவர், தற்போது பெயிண்டிங் பணிகளுக்காக தயாராகி வருகிறது, இன்னும் சில நாட்களில் ஈபிள் டவருக்கு பெயிண்ட் அடிக்கும் பணி தொடங்க இருக்கிறது.



ஆனால், இதனால், ஈபிள் டவர் பெரிதாக எந்த அளவிற்கு பாதிப்பின் தாக்கத்தை குறைக்காது என்றும், சீரமைப்பு பணிகள் மூலம் மட்டுமே ஈபிள் டவரை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகள் நடைபெற்றால், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடியாது; அது அவ்வளவு லாபம் தராது என்பதால் SETE நிறுவனம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவெடுக்க தயங்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.