முந்தைய காலத்தில், காதல் செய்யும் ஆணும் பெண்ணும் சந்தித்து கொள்வது பெரும் சவாலாக இருக்கும். தங்களின் பெற்றோருக்கு தெரியாமல், சகோதரிகள் கண்களில் மண்ணை தூவிவிட்டு போய் காதலனை சந்திப்பது பெரும் சவாலாக அமையும். ஆனால், தற்போது பெண்கள் ஒரு படிக்கு மேலே சென்றுவிட்டனர். காலம் களிகாலமாக ஆக்கிவிட்டது. காதலிக்கும் பெண்கள் தங்களின் காதலனை சந்திக்க நினைத்த உடனே இப்போது பார்த்து விடுகின்றனர்.





இந்த நிலையில், கம்போடியா நாட்டில் ரத்தினகிரி என்ற பகுதிக்குட்பட்ட பகுதியில் கெரூங் என்ற ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதனிற்கு தேவையான மிக முக்கியமான விஷயங்களான உணவு, இருப்பிடம் ஆகியவற்றை இயற்கையை கெடுக்காமல் இந்த பழங்குடிமக்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.


இந்த மக்களிடம் பெண்களுக்கான செக்ஸ் விஷயத்தில் வித்தியாமான பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தை பருவ வயதை எட்டிவிட்டால், அந்த குழந்தையின் பெற்றோரே ஊருக்கு ஒதுக்கு புறமாக அந்த பெண் தனது துணையை தேடுவதற்காக மூங்கீல்களான ஒரு குடிசையை அமைத்து தருகின்றனர். அந்த குடிசைக்கு காதல் குடிசை என பெயரிட்டுள்ளனர். அந்த குடிசையில் அந்த பெண் எவ்வளவு நாள் இருக்க விரும்புகிறாரோ அவ்வளவு நாள் இருந்து கொள்ளலாம். அங்கு அவருக்கு அவரது வீட்டில் இருந்து தினமும் உணவு சென்றுவிடும்.




அதுமட்டும் இன்றி அப்பகுதியில் உள்ள ஆண்களை அந்த குடிசைக்கு பெண்கள் அழைக்கலாம். அந்த ஆண்களுடன் அந்த பெண் உடலுறவும் வைத்துகொள்ள அனுமதி அளித்துள்ளனர்.  மகள் விரும்பிய ஆணுடன் உறவு கொள்ள ஏதுவாக பெற்றோரே குடிசை கட்டி அனுமதியும் கொடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண