இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சே பதவி விலகி குடும்பத்துடன் தலைமறைவானார். இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக கடந்த 12-ந் தேதி ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா, இன்று திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.


சஜீத் பிரேமதாசா தெரிவித்துள்ள ஆதரவில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தால் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இலங்கை அரசின் பொருளாதார நலன்சார்ந்த திட்டங்களுக்காகவே ரணில் விக்கிரமிங்சிங்கின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.  சஜித்பிரேமாசா தலைமையில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்தி​ல் இவையனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.




இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிஙகே தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் விகிதாச்சர அடிப்படையில் நாடாளுமன்ற எம்.பி.யாக பொறுப்பேற்றார். இந்த நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடியால் கோட்டபய ராஜபக்ச அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இலங்கையின் பிரதமராக பொறுப்பு வகித்த ராஜபக்ச வீட்டை தீ வைத்து கொளுத்தினர். மேலும், மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உயிருக்கு பயந்து தனது குடும்பத்துடன் தலைமறைவானார்.




இந்த நிலையில், கோத்தபய அரசின் அனைவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கோட்டபய மட்டும் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். இந்த நிலையில், இலங்கையின் பிரதமர் பொறுப்பேற்க முன்னணி கட்சிகள் தயங்கிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கே கடந்த 12-ந் தேதி பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து, உடனடியாக ஜப்பானிடம் 2 பில்லியன் கடன் வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அவரது ஆட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாசா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில், அவர் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். ரணில் ஆட்சிக்கு சஜீத் பிரேமதாச ஆதரவளித்திருப்பது அந்த நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண