Sri Lanka Crisis : இலங்கையின் பிரதமரா..? அதிபரா..? புதிய பொறுப்பேற்கும் சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தனே..!

இலங்கை நாட்டின் அடுத்த அதிபராக அல்லது பிரதமராக அந்த நாட்டு சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தேன பொறுப்பேற்க உள்ளார்.

Continues below advertisement

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டு அதிபர் மாளிகைக்குள் புகுந்து லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் புகுந்து அதிபர் மாளிகையை கைப்பற்றினர். மக்களின் போராட்டத்திற்கு பயந்து அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச தனது பதவியை வரும் 13-ந் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கோத்தபய ராஜபக்ச மட்டுமின்றி ரணில் விக்கிரமசிங்கவும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் மோசமான சூழலை கருத்தில் கொண்டு அந்த நாட்டின் தற்காலிக அதிபராக அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தேன பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில், அவர் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மஹிந்தயப்பா அபய்வர்தேன  1983ம் ஆண்டு முதல் அந்த நாட்டு எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் 1945ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி பிறந்தவர். அந்த நாட்டின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், கலாச்சாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1994ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலும் தெற்கு மாகாண முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

முன்னதாக, இலங்கையில் நேற்று அந்த நாட்டு அதிபர் மாளிகையை லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டு காவல்துறையினரும், ராணுவமும் தடுமாறினர். கண்ணீர் புகைக்குண்டுகளை  வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை களைக்க முயற்சித்தனர். ஆனாலும், லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் சிலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் போராட்டம் வலுப்பெற்றது. 


அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் தப்பிச்சென்றார். அதேசமயம் அவர் வெள்ளிக்கிழமை இரவே தனது குடும்பத்தினருடன் தப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியாகியது. போராட்டக்காரர்கள் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் வீட்டையும் தீக்கிரையாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Sri Lanka Crisis : இலங்கையில் திடீர் திருப்பம்... ஜுலை 13 ம் தேதி பதவி விலகும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே..!

மேலும் படிக்க : Sri Lanka Protest LIVE Updates: இலங்கை அமைச்சர் தம்மிக்க பெரேரா ராஜினாமா...!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola