Srilanka Crisis LIVE Updates:கோட்டபய ராஜபக்ச, அதிபர் பதவியை ராஜினாமா...
Sri Lanka Crisis LIVE: இலங்கையில் நீடித்து வரும் பதற்றமான சூழல் மற்றும் போராட்ட நிலவரங்களை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ்ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கோட்டபய ராஜபக்ச, தனது அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகருகு கடிதம் அனுப்பியுள்ளார்
சிங்கப்பூர் வந்துள்ள கோட்டபய ராஜபக்ச அடைக்கலமும் கேட்கவில்லை; நாங்கள் அடைக்கலமும் கொடுக்கவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதிபர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தால், இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோட்டபய ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்றடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கலவரத்தை கட்டுப்படுத்த, இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கவச வாகனத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலத்தீவில் இருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்.
இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு.
கோட்டபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பேறாத நிலை நிலவுகிறது
இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்க ஆதரவளிக்குமாறு இலங்கை மக்களை ராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அரசியல் தீர்வு காணும்படி, சபாநாயகரிடம் இலங்கை ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச, இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சிங்கப்பூருக்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என ரணில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, இன்று ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய அதிபருக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதி நடைபெறும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அதிபர் வெளிநாடு சென்றுள்ளதால் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் விளக்கம். கோத்தபய பதவி விலகுவார் என எதிர்ப்பார்த்த நிலையில் பதவி விலகல் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாததால் குழப்பம்.
இலங்கை அதிபராக இருந்த போதே துபாயில் குடியேறுவதற்கு வசதியாக தற்காலிக அதிபர் நியமனம் என தகவல்
ரணிலை தற்காலிக அதிபராக கோத்தபய ராஜபக்ச நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவுத்துள்ளதால் குழப்பம். அதிபர் வெளிநாடு சென்றுள்ளதால் தற்காலிக அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தகவல்.
இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு
மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோட்டபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர்அலுவலகம் முன்பு போராட்டம் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Srilankan Emergency : இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக, மூடப்பட்டது இலங்கை பங்குச்சந்தை. பங்குச்சந்தை செயல்பாடுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
கோட்டபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதா? கண்டித்த இந்திய தூதரகம்..!
இலங்கை அதிபர்களை பதவியில் இருக்கும்பொழுது கைது செய்வது சட்டவரம்புக்குள் இல்லாததாகும். அதைப் பயன்படுத்தி அவர் தப்பிப்பதில் முனைப்பாக இருப்பதாக தகவல்
இலங்கையின் இடைக்கால அதிபராக போட்டியிட எஸ்ஜேபி கட்சித் தலைவர் பிரேமதாசாவை நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய அதிபரை நியமிக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் போராட்டத்தின் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாட்டில் தங்கியுள்ளார், இலங்கை அதிபர் ராஜபக்சே. இதனை இலங்கையின் சபாநாயர் அதிராரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும், வரும் புதன் கிழமை பதவியை ராஜினாமா செய்ய இலங்கை வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தேன பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை முழுவதையும் சுற்றிவளைத்தனர். போராட்டக்காரர்களை பார்த்து பயந்துபோன இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடினார்.
இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கையில், இலங்கை அதிபர்கோத்தபய ராஜபக்சே ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு சபாநாயகர் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், அனைத்துக் கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்க வழிவகை செய்வதாகவும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து ராஜினாமா அழைப்புகளை எதிர்கொண்டிருந்த ராஜபக்சே, ஏப்ரல் தொடக்கத்தில் அவரது அலுவலக நுழைவாயிலை போராட்டகாரர்கள் நொறுக்கியதால், அதிபர் மாளிகையை தனது இல்லமாகவும் அலுவலகமாகவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பயன்படுத்தி வந்தார்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான இலங்கை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் கொந்தளிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. கடந்த 70 ஆண்டுகள் இல்லாத மோசமான, அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -