Just In





America sheep travel police car: காவல்துறையின் காரில் செம்மறி ஆடு பயணம்: வீடியோ வைரல்
அமெரிக்காவில், காவல்துறையின் காரில் செம்மறி ஆடு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தப்பிச் சென்ற செம்மறியாடு:
அமெரிக்காவின் மைனேவில் வசிக்கும் ஒருவர் இடங்களில் செம்மறி ஆடு ஒன்று சுற்றி திரிந்திருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதனையடுத்து அலைந்து திரிந்த ஆடுவை, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிடித்தனர். பின்னர் செம்மறி ஆடுவை உரியவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
காவல்துறையின் காரில் செம்மறி ஆடு:
இந்நிலையில் காவல்துறை வாகனத்தில் செம்மறி ஆடு கொண்டு செல்லப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஜன்னல் வழியாக வெளிப்புறங்களில் பார்த்துக் கொண்டு, கத்திக் கொண்டிருக்கும் செம்மறி ஆடுவை பார்க்க முடிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்