இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்துக்கான புதிய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று நடைபெற்றது.

 

 அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார். இவர் ராஜபக்ஷவினரின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று இலங்கையின் புதிய அமைச்சர்களாக ,
  விஜயதாச ராஜபக்ச  , மகிந்த அமரவீர, அலி சப்ரி,பிரசன்ன ரணதுங்க,

பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, கெஹெலிய ரம்புக்வெல,  ஹரின் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, விதுர விக்ரமநாயக்க ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்தனர்.

 

இந்த அமைச்சரவையில் முன்னதாக கோட்டாபாய ராஜபக்சவின் அமைச்சரவையில் இருந்த பல அமைச்சர்கள் மீண்டும் அந்த பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த அதிகளவான அமைச்சர்களுக்கு பொறுப்புகளும் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.



 

சர்வ கட்சி ஆட்சி என்ற போதும், அரசியல் கட்சி தலைவர்கள் சேர்ந்து அதிபரை தேர்வு செய்தார்கள் என்றாலும், இதில் தமிழ் கட்சிகளை சேர்ந்த எவருக்கும் நியமனங்கள் வழங்கப்படவில்லை இதுவரை.

 


இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர். 

 

1. பொது நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பதவி பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

2. கல்வி அமைச்சராக ஏற்கனவே இருந்த சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

 

3. கடற்றொழில் வளங்கள் அமைச்சர் பதவி மீண்டும் டக்ளஸ் தேவானந்தா வசமே சென்றுள்ளது.

 

4.சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

5.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன .

 

6.விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மஹிந்த அமரவீர

 

6.நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ

 



 

8 .சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ

 

9.பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன

 

10.நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

 

11.வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி

 

முன்னதாக இலங்கையின் மூத்த அரசியல்வாதியான  ஜிஎல்.பீரிஸ் வகித்த  வெளி விவகாரத்துறை தற்போது அலி சப்ரிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. (இவர் அதிபர் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்பதை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

 

12.பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்கிரமநாயக

 

13.வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - காஞ்சன விஜேசேகர

 

14.சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்

 

15.விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க

 

16.வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார

 

17.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்

 

18.வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ


 

என பல அமைச்சர் பதவிகள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

 



 நாடாளுமன்றத்தில் வெறும் கண்துடைப்புக்காக பெயரளவில் இஸ்லாமியர்கள்  இருவருக்கு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சர்வ கட்சி அமைச்சு என்ற சொன்ன போதும் அதில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கோ ,அல்லது தமிழ் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கோ எந்த முக்கிய பொறுப்புகளும் அமைச்சு பதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

 

அதேபோல் இன்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மை காலங்களாக இவர் பற்றி எதிர்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அதிபர்  ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.