இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை முழுவதையும் சுற்றிவளைத்தனர். போராட்டக்காரர்களை பார்த்து பயந்துபோன இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடினார்.
இந்த நிலையில், காலே மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்றும் வரும் மைதானத்தை சுற்றிலும் இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மைதானத்திற்கு உள்ளே செல்லாததால் இலங்கை - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பொதுமக்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் இந்த போட்டி நடப்பதிலும் விரைவில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை சுற்றிவளைத்த போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத போலீசார், ராணுவம் மிகவும் தடுமாறினர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் அதிபர் மாளிகையை சூழ்ந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசாரும், ராணுவமும் தடுமாறினர். கடைசியில் அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த எம்.பி. ஒருவரையும் சகட்டுமேனிக்கு தாக்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்