காடுகளுக்குள் கேமராவை எடுத்துக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். சில போட்டோகிராபர்கள் காடுகளுக்குள்ளே தங்கி சில அரிய புகைப்படங்கள் எடுப்பதை கண்டிருப்போம். ஆனால் அவர்கள் அங்கு விலங்குகளோடு விலங்காக தங்கி அதற்கு எந்த வித தொந்தரவும் ஏற்படாத வகையில் சென்று வருவார்கள்.


ஆனால் சில சுற்றுலா பயணிகள் ஜீப்பில் வாகனங்களை தொடர்ந்து செல்வது, உணவு தருவது, அவற்றிடம் ஒலி எழுப்புவது போன்ற வேலைகள் செய்வது நம் ஊர்களில் வழக்கம். அப்போது கோபப்பட்டு சில விலங்குகள் எதிர்வினை ஆற்றும் பல வீடியோக்களை கண்டுள்ளோம். 


அந்தவகையில், இலங்கையில் காரில் வந்த நபர் ஒருவர் காட்டு யானையை துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பூர்ணா செனவிரத்னே என்ற பயனர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்டது. TikTok பயனர் ஷஷிககிம்ஹந்தா என்ற நபர் காட்டு யானையை தனது காரை பயன்படுத்தி மோதுவதுபோல் பயமுறுத்துவதை அந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது.


 






ஏதோ இரவு நேரத்தில் யாரும் இல்லாத சாலையில் காட்டு யானையின் குட்டி ஒன்று தனியாக நின்றுள்ளது. இதை பார்த்த அந்த நபர் வாகனத்தை வேகமாக ஓட்டிசென்று ஆதரவற்ற யானையை வேண்டுமென்றே துரத்துகிறார். அந்த யானையும் பயந்துகொண்டே பின்னால் செல்கிறது. மேலும், ஒரு கட்டத்தில் பயந்துபோய் ஒரு மரத்திற்கு பின்னாடியும் மறைகிறது. 


இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பூர்ணா செனவிரத்னே கடுமையான குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், "இது முற்றிலும் அருவருப்பானது மற்றும் தவறானது என்பதை உணர உங்களுக்கு ஒரு அவுன்ஸ் மூளை இல்லை என்றால், நீங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். முட்டாள்தனமான சமூக ஊடகப் பார்வைகளுக்காக வனவிலங்குகளுக்கு ஆபத்து மற்றும் தொந்தரவு செய்யாதீர்கள். இது நல்லதுக்கு இல்லை. இந்த நபரைக் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும்”என்று குறிப்பிட்டுள்ளார். 


 






இந்த வீடியோ இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. மிகவும் கண்மூடித்தனமான இந்தசம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு நடவடிக்கைக்காக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண