• கடந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில்3 ரில்லியன் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் யாதார்தத்தில் அந்த வருமானம் 1.6 ரில்லியாக மாத்திரமே உள்ளது.

  • மதிப்பிடப்பட்ட அரச செலவு 3 ரில்லியன் ரூபாய்.

  • மேலதிக செலவுகள் காரணமாக மொத்த செலவீனம் 4 ட்ரில்லியனாக உயர்வடைந்துள்ளது.

  • கடந்த 2019 ஆம் ஆண்டு5 பில்லியன் டாலராக காணப்பட்ட அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 1 மில்லியன் டாலரை விட குறைவடைந்துள்ளது.

  • மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 75 மில்லியன் டாலர்களை பெற வேண்டும்.

  • ஒரு நாளுக்குரிய பெட்ரோல் கையிருப்பே உள்ளது.

  • நேற்று டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் டீசல் பற்றாக்குறை ஓரளவு நீங்கும்.

  • சமையல் எரிவாயுவிற்கான இறக்குமதிக்கான பணம் செலுத்தினால், அதனை பற்றாக்குறையும் சில காலங்களுக்கு இருக்காது.

  • 40 நாட்களுக்கும் மேலாக மசகு எண்ணெய் மற்றும் உலை எண்ணெய் கொண்ட 3 கப்பல்கள் இலங்கையின் கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

  • இறக்குமதிகளுக்கான பணம் செலுத்த திறந்த சந்தையில் டாலர்களைப் பெறுவதற்கு நாங்கள் பணியாற்றி வருகின்றோம்.


  • நான்கில் ஒரு பங்கு மின்சாரம் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் தினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனினும்  இந்த நெருக்கடியைத் தவிர்க்க நாங்கள் ஏற்கனவே பணத்தைப் பெற்றுள்ளோம்.

  • நுகர்வோருக்கு எரிவாயு வழங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை உடனடியாகப் பெற வேண்டும். மண்ணெண்ணெய் மற்றும் உலை எண்ணெய் நிலைமை இதனை விட அவசரமாக உள்ளது.

  • இதய நோய்க்கு தேவையான மருந்து, அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட பல மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  • மருந்து, மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு நான்கு மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை.

  • அரச மருந்துக் கூட்டு ஸ்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கான பணம் நான்கு மாதங்களாக செலுத்தப்படவில்லை.
    மருந்து நிறுவனங்கள் அரச மருந்துக் கூட்டுஸ்தாபனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

  • 2022ம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு மாற்றாக புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம்.

  • ஸ்ரீலங்கன் ஏர்லயன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்த முன்மொழிகின்றேன் எனவும் ஸ்ரீலங்கா பிரதமர் சுட்டிக்காட்டினார். பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு லிட்டர் ஒன்றுக்கு என்ற அடிப்படையில் பாரிய நட்டத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது.