இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அதனால் அங்குள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிடம் பண உதவி கேட்டு இலங்கை அரசு தொடர்ந்து மன்றாடி வரும் நிலையில், இலங்கையில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. 

பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாமல், அந்நாட்டு அரசு ஸ்தம்பித்து போய் உள்ளது. எந்த பொருளின் விலையை கட்டுப்படுத்துவது... எல்லாமே உயர்ந்து நிற்கிறது. அப்படி அதிக அளவில் பாதிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று பெட்ரோல் , டீசல் விலை. நம்மூரை விட அங்கு மிக குறைந்த விலையில் தான் பெட்ரோல் , டீசல் விலை இருந்தது. இப்போது, நம்மூர் விலையை நெருங்கி வருகிறது. அங்குள்ள தற்போதைய பொருளாதார சூழலில், இந்த விலை மிக அதிகம் என்கிறார்கள். அதை வாங்க, மக்களிடம் பணம் இல்லை என்கிறார்கள். இலங்கை இதற்கு முன் இருந்த விலையை விட, பெட்ரோலுக்கு ரூ.77, டீசலுக்கு ரூ.55 கூடுதலாக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இன்றைய நிலவரப்படி இலங்கையின் பெட்ரோல் , டீசல் விலை:

Product
SriLanka Price
IND Rs
Petrol Octane 92 Rs. 254.00
Rs.72.86
Petrol Octane 95 Rs. 283.00
Rs.81.17
Lanka Auto Diesel Rs. 176.00
Rs.50.48
Lanka Super Diesel 4* Rs. 254.00
Rs.72.86
Kerosene Rs. 87.00 Rs.24.95

 

இந்திய விலையோடு ஒப்பிடும் போது இது குறைவு தான் என்றால், இந்த விலையே அவர்களுக்கு கடும் நெருக்கடியாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து கட்டணங்கள் அங்கு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக , பொதுமக்கள் குறைந்த கட்டணம் கொண்ட ரயில் போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கூட்டம் அலை மோதுகிறது. இதன் காரணமாக , ரயில் சேவையை அதிகரிக்க, ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க செயலாளர் சுமன் சாமர, இலங்கையின் போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‛எரிபொருள் விலையேற்றத்தால் தனிப்பட்ட வாகன பயன்பாட்டை மக்கள் தவிர்த்து, ரயில் பயணத்தை அதிக அளவில் பயன்படுத்துவதாகவும், பஸ் கட்டண உயர்வுகம் அதற்கு ஒரு காரணம். எனவே ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. உடனே, ரயில் சேவையை விரிவுபடுத்தி, மக்கள் பயணத்திற்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் கூட்டத்தை சமாளிக்க முடியாது,’ என அந்த அறிக்கையில் ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

பொல்ஹாவெல-கொழும்பு கோட்டை , நீர்க்கொழும்பு-கொழும்பு கோட்டை , அளுத்கம-கொழும்பு கோட்டை , மருதானை மற்றும் அவிசாவலை-கொழும்பு கோட்டை ஆகிய வழித்தடங்களில் உடனடியாக கூடுதல் தேவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Also Read | Srilanka Economic Crisis: இலங்கைக்கு 7500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கிய இந்தியா..